குல்தீப் செங்கார் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டது உண்மையா? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா

குல்தீப் சிங் செங்காரை இன்னனும் கட்சியிலிருந்து நீக்காதது ஏன் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

news18
Updated: July 31, 2019, 12:06 PM IST
குல்தீப் செங்கார் பா.ஜ.கவிலிருந்து நீக்கப்பட்டது உண்மையா? இந்தக் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா
பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்
news18
Updated: July 31, 2019, 12:06 PM IST
உன்னாவ் தொகுதி எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காரை கடந்த ஆண்டே பா.ஜ.கவிலிருந்து நீக்கிவிட்டோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஸ்வட்ன்ரா தேவ் சிங் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னா பகுதியைச் சேர்ந்தவர் பாதிக்கப்பட்ட பெண்(பாலியல் வன்கொடுமை நடைபெற்றபோது அவருக்கு வயது 17. அப்போது அவர் சிறுமி). அவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்தார்.

அதனையடுத்து, இந்த விவகாரம் தேசிய கவனம் பெற்ற நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணை செய்துவரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை, பாதிக்கப்பட்ட பெண், அவரது உறவினர்கள் பயணித்த காரின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் பெண் தாய், அத்தை ஆகியோர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பெண் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.


இந்தநிலையில், குல்தீப் சிங் செங்காரை இன்னனும் கட்சியிலிருந்து நீக்காதது ஏன் என்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து பதிலளித்த உத்தரப் பிரதேச பா.ஜ.க தலைவர் ஸ்வட்ன்ரா தேவ் சிங், ‘அவர் கடந்த ஆண்டே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவர், தற்போது வரை கட்சியில் இல்லை’ என்று தெரிவித்தார்.

இதுகுறித்து தெரிவித்த உத்தரப் பிரதேச பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, ‘குல்தீப் சிங்கிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த விளக்கம் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாதநிலையில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்’ என்று தெரிவித்தார்.

ஆனால், இந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, யோகி ஆதித்யநாத் பங்கேற்ற பிரச்சார மேடையில் குல்தீப் சிங் செங்காரின் மனைவி பங்கேற்றிருந்தார். அதேபோல, மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பா.ஜ.க எம்.பி சாக்ஷி மஹாராஜ், சிதாபூர் சிறைக்குச் சென்று குல்தீப் செங்காரைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். ஆனால், தற்போது பா.ஜ.க அவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குல்தீப் செங்காரை கட்சியிலிருந்து நீக்கியதற்கான எந்த ஆவணமும் இல்லை.

Loading...

Also see:

First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...