சாதித்தார் ஜெகன்மோகன் ரெட்டி! ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு?

ஜெகன் மோகன் ரெட்டி

அதில், 141 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது

 • News18
 • Last Updated :
 • Share this:
  ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ள 173 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 139 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதனால், ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.

  நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலைத் தவிர, ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல்களும் நடைபெற்றது. ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 173 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.

  அதில், 141 தொகுதிகளில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 32 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. தற்போது, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சியில் உள்ளது. இதன்மூலம், ஜெகன்மோகன் ரெட்டியிடம் சந்திரபாபு நாயுடு ஆட்சியை இழப்பார் என்று தெரிகிறது.

  மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆந்திராவில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸும், 5 தொகுதிளில் தெலுங்கு தேசம் கட்சியும் முன்னிலையில் உள்ளது. இந்தத் தேர்தல், சந்திரபாபு நாயுடுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
  தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

  Also see:

  Published by:Karthick S
  First published: