• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்தியாவை கொரோனா 3-வது அலை தாக்குமா?

இந்தியாவை கொரோனா 3-வது அலை தாக்குமா?

மாதிரி படம்

மாதிரி படம்

கொரோனா மூன்றாவது அலை தாக்குதல் இருக்கும் என்று வல்லுநர்கள் விவரிக்கும் அதிலிருந்து பாதுகாப்பது எப்படி என்ற கேள்வி எழுந்தள்ளது.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில், 3ம் அலை உருவாகுமா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

    உலகை வேட்டையாடி வரும் கொரோனா வைரஸ், உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையில் மேலும் வேகமெடுத்துள்ளது. பாரபட்சமின்றி அனைத்து தரப்பினரையும் தாக்கும் கொரோனாவுக்கு இரையானோர் ஏராளமானோர்.

    பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இரண்டாம் அலை பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதால், தினசரி நோய் தொற்றின் எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியிருக்கிறது. இது ஆறுதலான செய்தி என்றாலும், கொரோனா 3வது அலை உருவாகுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    பிரிட்டன், காங்கோ உள்ளிட்ட நாடுகளில் கொரோனா 3ம் அலை பாதிப்பு தொடங்கிவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்தியாவில் மூன்றாம் அலை பாதிப்பில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளன. இது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை விதைத்துள்ளது.

    இந்நிலையில், கொரோனாவின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று கொரோனா தடுப்பு நிர்வாகக்குழுவின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். குழந்தைகளை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க பெற்றோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    தமிழகம் உட்பட நாடு முழுவதும் பெருமளவு தடுப்பூசி போடப்படாததால், மூன்றாம் அலைக்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் ஐசிஎம்ஆர் விஞ்ஞானி கணேஷ்குமார்.

    ஊரடங்கால் தான் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரசுக்கு பரவும் தன்மை மிக அதிகம் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தடுப்பூசி போடுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவையே, கொரோனாவை தடுக்கும் ஆயுதம் என்பது, ஒட்டுமொத்த மருத்துவர்களின் அறிவுரை ஆகும்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: