கேரள திரைப்பட நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட வழக்கில் நடிகை காவ்யா மாதவனுக்கும் முக்கிய பங்கு என்பதை கூறும் வகையில் செல்போன் உரையாடல் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் பிரபல நடிகை அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகையின் தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் 6 முக்கிய குற்றவாளிகள், நடிகையின் கார் ஓட்டுநரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்ததையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர், ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், தற்போது செல்போன் உரையாடல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்ந்து விசாரணைக்காக திங்கள்கிழமை நேரில் ஆஜராக கொச்சி குற்றப்பிரிவு போலீசார் நடிகை காவ்யா மாதவனுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சூரஜ்
நடிகர் திலீப்பின் சகோதரி கணவன் சூரஜ் என்பவரும் அவரது நண்பர் சரத் என்பவரும் உரையாடும் 3 செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகியுள்ளன. விசாரணைக் குழுவினர் இந்த மூன்று செல்போன் உரையாடல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர்.
Must Read : புகார் மனு மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.. செல்போன் டவர் மீது ஏறி போராடிய பெண்
இதைத்தொடர்ந்து கேரளா, கொச்சி குற்றப்பிரிவு போலீசார் மேல் விசாரணைக்காக வரும் திங்கட்கிழமை நேரில் ஆஜராக நடிகை காவ்யா மாதவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.