ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண்ணை கடத்தி 36 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கொடுமை

பெண்ணை கடத்தி 36 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கொடுமை

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பெண்ணை கடத்தி 36 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் நீதி வேண்டிக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Haryana, India

  ஹரியானாவில் தீவனம் சேகரிக்கச் சென்ற போதுக் கடத்தி ராஜஸ்தானில் ஒரு கிராமத்தில் வைத்து 36 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  ஹரியானாவில் கடந்த ஜூலை 27ம் தேதி 47 வயதான பெண் ஒருவர் மாடுகளுக்குத் தீவனம் சேகரிக்கச் சென்றபோது காரில் வந்தவர்கள் அவரைக் கடத்திச் சென்றுள்ளனர். அவரை ராஜஸ்தானில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்குக் கடத்தி சென்று அறையில் அடைத்து வைத்துக் கூட்டுப் பாலியல் செய்தாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

  மேலும் அவருக்கு மயக்க மருந்துக் கொடுத்துப் பல முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனை காணொளியாகப் பதிவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடத்தியவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளிகளை வைத்து பெண்ணின் குடும்பத்திடம் ரு.3 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.

  Also Read : கோமாவில் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வைத்திருந்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

  பின்னர் செப்டம்பர் 1ம் தேதி அந்த காணொளிகளை இணையத்தில் வெளியிடாமல் இருக்க குடும்பத்தினரிடமிருந்து ரூ.3 லட்சம் பெற்று அவரை விடுவித்துள்ளனர். இந்த கொடுமையான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இது குறித்துக் காவல் கண்காணிப்பாளர் வருண் சிங்லா தெரிவிக்கையில், புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டியவர்கள் மேல் ஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தீவிர விசாரணை நடத்தி உண்மை வெளிப்படுத்தப்படும் என்றும் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

  Published by:Janvi
  First published:

  Tags: FIR Filed, Gang rape, Haryana