வீட்டில் தனியாக இருந்த முதியவரை நிர்வாணப் படம் எடுத்து மிரட்டிய 3 இளம்பெண்கள் போலீசில் சிக்கினர்

கைது செய்யப்பட்ட 3 இளம்பெண்கள்

முதியவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தஅப்பெண்கள், பணம் தரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

  • Share this:
காவலர் போல் வேடமிட்டு முதியவரை மிரட்டி நிர்வாணப் படம் எடுத்து பணம் பறிக்க முயன்ற மூன்று இளம்பெண்களை போலீசார் கைது செய்தனர். 

ஹரியானா மாநிலம் , யமுனா நகர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட  புது ஹமிதா காலனியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, அப்பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அவரது மகன் வெளிநாட்டில் வசித்து வருகிறார், மகள் திருமணம் ஆகி சென்று  விட்டார்.

இந்நிலையில், முதியவர் வீட்டுக்குள் போலீசார் உடையில் புகுந்த மூன்று பெண்கள், வீட்டில் இருந்த முதியவரை ஆடைகளை கழற்றும்படி மிரட்டியுள்ளனர். பின்னர்,  முதியவரை நிர்வாணமாக வீடியோ எடுத்தஅப்பெண்கள், பணம் தரவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

இதையும் படிங்க.. பாலியல் விவகாரம்: சுஷில்ஹரி பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை..

அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய அப்பெண்கள், முதல்கட்டமாக 50 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளனர்.  இந்த சம்பவம் தொடர்பாக யமுனா நகர் காவல் நிலையத்தில் முதியவர் புகார் அளித்தார்.

இளம்பெண்கள் கைது


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில், வீட்டில் தனியாக தான் வசித்து வருவதாகவும்  போலீஸ் உடையில் முதலில் ஒரு பெண் வந்ததாகவும் அடுத்த 5 நிமிடத்தில் 2 பெண்கள் வந்து தங்களை போலீசார் என கூறி, தனது உடையை களைய கூறிமிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார்,குற்றச் செயலில் ஈடுபட்ட  மூன்று பெண்களையும் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர்ப் படுத்தினர்.
Published by:Murugesh M
First published: