ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாஜக அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு! - பெண் பயிற்சியாளர் அளித்த புகரால் பரபரப்பு

பாஜக அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு! - பெண் பயிற்சியாளர் அளித்த புகரால் பரபரப்பு

ஹரியானா பாஜக விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங்

ஹரியானா பாஜக விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங்

தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இந்த பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சந்தீப் சிங் பதில்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

பெண் பயிற்சியாளர் அளித்த பாலியல் புகார் காரணமாக  ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் சந்தீப் சிங் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

கடந்த வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய பெண் பயிற்சியாளர், அமைச்சர் சந்தீப் சிங் தன்னை முதலில் ஜிம்மில் பார்த்ததாகவும், பின்னர் தன்னை இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொண்டதாக கூறினார். அதில் அங்கு அவர் தனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாக கூறி தன்னை அழைத்ததாக பயிற்சியாளர் கூறினார்.

இதனையடுத்து அவர் சில ஆவணங்களுடன் இங்குள்ள அவரது குடியிருப்பு மற்றும் முகாம் அலுவலகத்தில் அவரை சந்திக்க ஒப்புக்கொண்டதாகவும், அங்கு சென்றபோது, ​​அமைச்சர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றம் சாட்டை முன் வைத்தார். இதனையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தன் பேரில் சந்தீப் சிங் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஹரியானா விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை ஹரியானா முதல்வர் கட்டாரிடம் ஒப்படைத்துள்ளார். மேலும் தன் பேருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும் இதனை நேர்மையாக விசாரணையை எதிர்கொள்வேன் என சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சந்தீப் சர்மா? இந்திய தேசிய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனாக சந்தீப் சிங் சிங் ஒரு பெனால்டி கார்னர் நிபுணராக இந்திய அணியில் இருந்தார். இதனால் அவருக்கு ஃப்ளிக்கர் சிங் என்ற புனைப்பெயரைப் பெற்று தந்தது.
20 வயதில் சந்தீப் சிங் 2007ஆம் ஆண்டு ஹாக்கி உலகக் கோப்பைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு ரயிலில் தற்செயலாக துப்பாக்கியால் சுடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வந்த சந்தீப் சிங் இந்திய தேசிய அணியில் தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டார், மேலும் சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையின் 2008 மற்றும் 2009 பதிப்புகளில் அதிக கோல் அடித்து அசத்தினார்.
இவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி சூர்மா என்ற வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் எம்டிவி ரோடீஸ் என்ற ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் சந்தீப் சிங் தோன்றுள்ளார்.
இதனையடுத்து ஹாக்கியில் இருந்து விலகிய சந்தீப் சிங் அரசியலில் ஈடுபட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனஹா கட்சி சார்பாக ஹரியானாவின் பெஹோவா தொகுதியில் இருந்து சட்டமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து ஹரியானா அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ளார்.
First published:

Tags: Haryana