கொரோனாவால் உயிரிழந்த 300 நபர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்தவர் கொரோனாவால் மரணம்!

மாதிரி படம்

கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோருக்கு இறுதிச் சடங்குகள் செய்துள்ளார்.

  • Share this:
கொரோனாவால் உயிரிழந்த நபர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வந்த நகராட்சி ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிகை சற்று குறையத் தொடங்கினாலும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று பரவும் அச்சம் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்ய குடும்ப உறுப்பினர்களே முன்வராத நிலையில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்துக்கு நடுவே தன்னார்வலர்களும், காவலர்களும் தாமாகவே முன்வந்து உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வருவது மனிதநேயத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஹிசார் நகராட்சியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை செய்து வந்த நகராட்சி ஊழியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

43 வயதாகும் பிரவீன் குமார், கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய ஹிசார் நகராட்சியால் அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக செயல்பட்டு வந்தார்.

ஹிசார் நகராட்சிக்கு உட்பட்ட சஃபாய் கரம்ச்சாரி ஒன்றியத்தின் தலைவராக இருந்து வந்த பிரவீன் குமார், கடந்த ஆண்டு கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்த 300க்கும் மேற்பட்டோருக்கு இறுதிச் சடங்குகள் செய்துள்ளார்.

Read More:  ஃபேஸ்புக் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: 25 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்ட கொடூரம்!

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரவீன் குமாருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தது ஹிசார் நகராட்சியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

Read More:  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

ரிஷி நகரில் உள்ள மயானத்தில் பிரவீன் குமாரின் உடலுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நகராட்சியினர் இறுதி சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்துள்ளனர்.

குடும்பத்தினர், உறவினர்களே தயங்கிய நிலையில் தாமாகவே முன்வந்து மனிதநேயத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த பிரவீன் குமாரின் மறைவு செய்தி அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: