ஹரியானாவின் 'கிங்மேக்கர்' துஷ்யந்த் சவுதாலா! யார் இவர்..?

ஹரியானாவின் 'கிங்மேக்கர்' துஷ்யந்த் சவுதாலா! யார் இவர்..?
துஷ்யந்த் சவுதாலா
  • Share this:
ஹரியானாவில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் 31 வயதேயான இளம் தலைவர் துஷ்யந்த் சவுதாலா.

ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் வழிப்பேரன் தான் துஷ்யந்த் சவுதாலா. இவரது தந்தை முன்னாள் எம்.பி.யான அஜய்சவுதாலா ஆவார்.

தமது குடும்ப பாரம்பரியத்தைப் பின்பற்றி இந்திய தேசிய லோக் தளம் கட்சியில் பொறுப்புகளை பெற்றார். 2014ம் ஆண்டு அதே கட்சியின் சார்பில் நாட்டின் இளம் எம்.பி.யாக 26 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றார்.


முன்னாள் முதலமைச்சரான ஓம்.பிரகாஷ் சவுதாலா ஊழல் வழக்குகளில் சிக்கிய நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப் படுத்திக் கொண்டதாகக் கூறி கடந்த 2018ம் ஆண்டு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

டிசம்பரில் புதிய கட்சி தொடங்கிய துஷ்யந்த் முதல் கூட்டத்திலேயே 6 லட்சம் பேரை திரட்டி வலிமை காட்டினார். முன்னாள் துணை பிரதமரும் தமது கொள்ளு தாத்தாவுமான தேவிலால் நினைவாக, ஜனநாயக் ஜனதா கட்சி என்ற பெயரையும் சூட்டிக் கொண்டார்.

புதிய கட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே எதிர்கொள்ளும் முதல் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியாளரை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் துஷ்யந்த் சவுதாலா.Also Watch : கட்சி தொடங்கி ஓராண்டிற்குள்ளாகவே கிங் மேக்கரான துஷ்யந்த் சவுதாலா!

First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading