Home /News /national /

சார் ஆட்சியருக்கு ஒரு மாத விடுப்பு - விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த ஹரியானா பா.ஜ.க அரசு

சார் ஆட்சியருக்கு ஒரு மாத விடுப்பு - விவசாயிகள் போராட்டத்துக்கு பணிந்த ஹரியானா பா.ஜ.க அரசு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஹரியானாவில் விவசாயிகள் போராட்டத்துக்கு அம்மாநில பா.ஜ.க அரசு பணிந்துள்ளது.

    ஹரியானாவில் ஒரு வாரத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. போலீஸார் நடத்திய தடியடி குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது.

    மத்திய அரசின் வேளாண் சட்டங்களைக் கண்டித்து, டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சார் ஆட்சியரான ஆயுஷ் சின்ஹா, விவசாயிகளின் தலையை உடைப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

    இதனைக் கண்டித்து பாஜக-வின் கூட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த கர்னால் பகுதியை நோக்கி விவசாயிகள் கடந்த மாதம் 28-ம் தேதி பயணம் மேற்கொண்டனர். செல்லும் வழியில் நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், 10 பேர் காயமடைந்த நிலையில், சுஷில் கஜால் என்ற விவசாயி உயிரிழந்தார்.

    இதனைத் தொடர்ந்து, கர்னாலில் உள்ள தலைமைச்செயலக கிளையின் முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுடன் அரசு 4-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது, சார் ஆட்சியரின் பேச்சு குறித்தும், தடியடி குறித்தும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என அரசு அறிவித்தது. உயிரிழந்த விவசாயியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படும், ஒரு மாத கால விசாரணை முடிவடையும் வரை ஐஏஎஸ் அதிகாரி ஆயுஷ் சின்ஹாவுக்கு விடுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டுள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Haryana

    அடுத்த செய்தி