ஹரியானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் கட்டார்... துணை முதல்வராகும் துஷ்யந்த் சவுதாலா...!

ஹரியானா முதல்வராக நாளை பதவியேற்கிறார் கட்டார்... துணை முதல்வராகும் துஷ்யந்த் சவுதாலா...!
துஷ்யந்த் சவுதாலா | மனோகர் லால் கட்டார்
  • News18
  • Last Updated: October 26, 2019, 4:17 PM IST
  • Share this:
ஹரியானாவில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ள சூழலில்ஜேஜடி கட்சித் தலைவர் துஷ்யந்த் சவுதாலா, பாஜகவுக்கு ஆதரவு அளித்து, ஆட்சியில் பங்கு பெற உள்ளார்.

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக 40 தொகுதிகளிலும், காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

ஆட்சியமைக்க பாஜகவுக்கு தேவையான பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைக்காத போதும், தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்தது. முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவின் பேரனும் முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரனுமான துஷ்யந்த் தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி, கட்சி தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே 10 தொகுதிகளை வென்றது.


அதனால் துஷ்யந்த் சவுதாலாவின் புதிய கட்சியான ஜேஜடியின்ஆதரவை காங்கிரசும் பாஜகவும், கோரின. இந்நிலையில் துஷ்யந்த் சவுதாலாவுடன் பாஜக தலைவர் அமித் ஷா டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூரும் பங்கேற்றார்.

ஆலோசனைக்குப் பிறகு பாஜகவுக்கு ஆதரவளிப்பதாக அறிவித்த துஷ்யந்த், மாநிலத்தின் நலன் கருதி இம்முடிவை எடுத்ததாக அறிவித்தார்.

அத்துடன் ஆளுநரை இன்று இரு கட்சித் தலைவர்களும் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளனர். நாளை முதல்வராக மனோகர் லால் கட்டாரும், துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலாவும் பதவிப்பிரமாணம் எடுக்க உள்ளனர்.அமைச்சரவை பின்னர் பதவியேற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மகன் பதவியேற்ப்புக்காக சிறையில் உள்ள அஜய் சவுதாலா 2 வாரம் பரோலில் வெளி வந்துள்ளார்.

இதனிடையே கொடுத்த வாக்கை ஜேஜேடி மீறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாள ரன்தீப் சுர்ஜேவாலா குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ கண்டா, பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாக கூறியிருந்த நிலையில் அக்கட்சியும் அதனை பரிசீலித்ததால் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனால், தனது முயற்சியில் இருந்து பாஜக பின் வாங்கி, கண்டாவின் ஆதரவை பெறப்போவதில்லை என்று கூறியுள்ளது.

First published: October 26, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading