முகப்பு /செய்தி /இந்தியா / லாரி ஏற்றி டி.எஸ்.பியை கொலை செய்த மாபியா கும்பல் - ஹரியானாவில் பயங்கரம்!

லாரி ஏற்றி டி.எஸ்.பியை கொலை செய்த மாபியா கும்பல் - ஹரியானாவில் பயங்கரம்!

டி.எஸ்.பி சுரேந்திர குமார் பிஷ்னோய்.

டி.எஸ்.பி சுரேந்திர குமார் பிஷ்னோய்.

சட்ட விரோதமாக சுரங்க தோண்டும் வேலையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிப்பதற்கு காத்திருந்த டி.எஸ்.பியை மாபியா கும்பல் லாரி ஏற்றி கொன்றுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரி டி.எஸ்,பி சுரேந்திர குமார் பிஷ்னோயை லாரி ஏற்றி மாபியா கும்பல் கொலை செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் தவுடு மலையில் சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டும் வேலைகள் நடந்து வருவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலையடுத்து டிஎஸ்பி சுரேந்திர குமார் பிஷ்னோய் தவுடு மலைக்கு சென்றுள்ளார். இதற்கு பிறகு அவர் காணாமல் தேடப்பட்டு அவரின் உடல் ஒரு குப்பைதொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதை குறித்து கண்ணால் பார்த்த சாட்சி ஒருவர் கூறும்போது, “அதிகாலை 12 மணியளவில், சட்ட விரோதமாக சுரங்க வேலையில் ஈடுபட்டு வருபவர்களை பிடிப்பதற்கு டி.எஸ்.பி அவர் வாகனத்திற்கு அருகில் காத்துக்கொண்டிருந்தார். எதிரில் வந்த லாரியை நிறுத்தும்படி அவர் கையசைத்தார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் அவரை ஏற்றிவிட்டு சென்றது” என வாக்குமூலம் அளித்துள்ளார்.

லாரியால் அவரை ஏற்றியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

இதற்கு ஹரியானா போலிஸ், “டி.எஸ்.பி சுரேந்திர சிங் இன்று பணியில் உள்ள போதே தன் உயிரை நீத்துள்ளார். ஒரு வீரமான காவல் துறை அதிகாரியை நாங்கள் இழந்துள்ளோம். அவரின் குடும்பத்திற்கு நாங்கள் எங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என பதிவிட்டுள்ளனர்.

மேலும், “தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தருவதில் இந்த காவல்துறை அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்” என கூறியுள்ளனர்.

ஹரியானா மாநில காங்கிரஸ் இந்த சம்பவத்திற்கு, அம்மாநில பாஜக முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரை குற்றம்சாட்டியுள்ளது.

மேலும், அவர்கள் பதிவிட்ட டுவீட்டில், “முதலமைச்சர் கட்டார் அவர்களே, நம் மாநிலத்தை நீங்கள் எப்படி மாற்றியுள்ளீர்கள்? இங்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பில்லை, காவல்துறைக்கும் பாதுகாப்பில்லை. பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்? அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். மேலும், அவரின் குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்கட்டும்” என பதிவிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Haryana, Police