ஜிம்மிலிருந்து வெளியே வந்த காங்கிரஸ் தலைவரின் உடலைத் துளைத்த 10 குண்டுகள்!

சி.சி.டி.வி காட்சியில், முகத்தில் முகமூடியால் மறைத்த ஒருவர் துப்பாக்கியைக் கொண்டு விகாஷ் சுட்டுள்ளார் என்று தெரிகிறது.

ஜிம்மிலிருந்து வெளியே வந்த காங்கிரஸ் தலைவரின் உடலைத் துளைத்த 10 குண்டுகள்!
விகாஷ் சவுத்ரி
  • News18
  • Last Updated: June 27, 2019, 7:18 PM IST
  • Share this:
ஹரியானா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் விகாஷ் சவுத்ராய் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்தவர் விகாஷ் சவுத்ரி. ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் இன்று காலையில் ஜிம்மிலிருந்து வெளியே வந்த அவரை, திடீரென்று ஒருவர் துப்பாக்கியால் சராமாரியாக சுட்டார். சுமார், 10 குண்டுகள் அவரைத் தாக்கியுள்ளது.

படுகாயமடைந்த சவுத்ரி உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டார். ஆனால், முன்னதாகவே அவர் உயிரிழந்துவிட்டார். சி.சி.டி.வி காட்சியில், முகத்தில் முகமூடியால் மறைத்த ஒருவர் துப்பாக்கியைக் கொண்டு விகாஷை சுட்டுள்ளதாக தெரிகிறது. இந்தச் சம்பவம், ஹரியானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஹரியானா மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வார், ‘இங்கே காட்டாட்சி நடந்துகொண்டிருக்கிறது. இங்கே, சட்டத்தின் மீது எந்தப் பயமும் இல்லை. நேற்று, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் மீது கத்தி குத்து நடைபெற்றுள்ளது’ என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவில், ‘காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் விகாஷ் சவுத்ரி கொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரிய, அவமானகரமானது, துயரமான சம்பவம். ஹரியானா மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என்பதை இந்தச் சம்பவம் காட்டுகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:
First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading