• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகளுக்கு எதிராக தடியைக் கையில் எடுங்கள், வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்: ஹரியாணா முதல்வர் கட்டார் சர்ச்சைப் பேச்சு

விவசாயிகளுக்கு எதிராக தடியைக் கையில் எடுங்கள், வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள்: ஹரியாணா முதல்வர் கட்டார் சர்ச்சைப் பேச்சு

manohar lal khattar

manohar lal khattar

விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக தடியைக் கையிலெடுங்கள், பழிக்குப் பழி வாங்குங்கள் இதனால் சிறை சென்று விடுவோம் என்று அஞ்ச வேண்டாம் நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் என்று பாஜகவின் கிசான் மோர்ச்சா, அதாவது பாஜக விவசாயப் பிரிவினரிடத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    விவசாயப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு எதிராக தடியைக் கையிலெடுங்கள், பழிக்குப் பழி வாங்குங்கள் இதனால் சிறை சென்று விடுவோம் என்று அஞ்ச வேண்டாம் நீங்கள் வரலாற்றில் இடம்பிடிப்பீர்கள் என்று பாஜகவின் கிசான் மோர்ச்சா, அதாவது பாஜக விவசாயப் பிரிவினரிடத்தில் ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹரியாணா முதல்வர் கட்டார் கூறியதாக ஏ.என்.ஐ, வெளியிட்ட செய்தியில், “ஹரியாணாவின் வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பாஜக விவசாயப் பிரிவினர் 700-1000 பேர் கொண்ட குழுக்களை அமையுங்கள். போராடும் விவசாயிகள் என்ன செய்கிறார்களோ அதற்கு பழிக்குப் பழி வாங்கும் செயலை நீங்களும் செய்யுங்கள், தடியெடுங்கள். இதனால் சிறைத்தண்டனை கிடைக்கும் 3 மாதம் 6 மாதம் சிறை செல்ல நேரிட்டாலும் கவலைப்படாதீர்கள். நீங்கள் பெரிய தலைவர்களாவீர்கள். வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும்” என்று சர்ச்சைக்குரிய முறையில் வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியுள்ளார்.

    ஹரியானா முதல்வர் கட்டாரின் இந்தப் பேச்சு சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து விவசாயிகள் அமைப்பான சம்யுக்த் அமைப்பு, காங்கிரஸ் கட்சி ஆகியவை கட்டாருக்கு கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். அதாவது மனோகர் லால் கட்டார் முதலமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட வேண்டும் என்று காங்கிரஸ் குரல் கொடுத்து வருகிறது.

    அரசியல் சாசனச்சட்டத்தின் கீழ் முதல்வர் பதவி வகிக்கும் ஒருவர் தன் கட்சித் தொண்டர்களை ஜனநாயகப் போராட்டத்தின் மீது ஏவி விட்டு வன்முறையைத் தூண்டி விடுமாறு பேசுவதை அனுமதிக்க முடியாது என்று காங்கிரஸ் சாடியுள்ளது. இப்படி ஆயுதம் எடுக்க ஒரு முதல்வரே கூறினால் பாஜக கட்சியின் கொள்கைகளை உற்று நோக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

    காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர், ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுதான் குருமந்திரம், அரசு பதவியில் அமர்ந்து கொண்டு போராடும் விவசாயிகளுக்கு எதிராக ஆயுதத்தை கையில் எடுக்கத் தூண்டி விடுபவர் தேசத் துரோகி ஆவார். இவர் அராஜகத்தைப் பரப்புகிறார் என்று கடுமையாகக் கண்டித்துள்ளார். இவர் மட்டுமல்ல சப்டிவிஷனல் மேஜிஸ்ட்ரேட் ஆயுஷ் சின்ஹா, போலீஸ் அதிகாரிகளிடம், எதிர்க்கும் விவசாயிகளின் மண்டையை உடையுங்கள் என்று பேசியதும் வைரலாகி கடும் கண்டனங்களை கிளப்பியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: