ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மனோகர் லால் கட்டார்!

ஹரியானாவில் ஆட்சியமைக்க உரிமை கோருகிறார் மனோகர் லால் கட்டார்!
ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர்,
  • News18
  • Last Updated: October 24, 2019, 5:59 PM IST
  • Share this:
ஹரியானா சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகள் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளது.

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக் தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக 40 இடங்களில் முன்னிலையில் உள்ளது.




காங்கிரஸ் கட்சி 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது.  யாரும் எதிர்பாராதவிதமாக துஸ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி 12 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

இதனால், ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. எனினும், ஆட்சியமைக்க சுயேட்சைகள் மற்றும் சிறு கட்சிகளின் ஆதரவு தேவை என்ற நிலை உள்ளது.

ஆனால், பாஜகவுக்கு சுயேட்சைகள் ஆதரவு போதுமானதாக உள்ளது. இதனால், அக்கட்சி சுயேட்சைகளை வளைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர இருக்கிறார். இதற்கேற்ப, ஹரியானாவில் பாஜக ஆட்சியமைக்கும் என்று பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா ட்வீட் செய்துள்ளார்.



“கடந்த 5 ஆண்டுகளில், மோடி தலைமையிலான மத்திய அரசின் கீழ், கட்டார் அரசாங்கம் ஹரியானா மக்களின் நலனுக்காக அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தியது.

பாஜகவை மிகப்பெரிய கட்சியாக மாற்றி மீண்டும் சேவை செய்ய வாய்ப்பளித்த பொதுமக்களுக்கு நன்றி.

முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், சுபாஷ் பராலா மற்றும் அனைத்து தொண்டர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.



 
First published: October 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading