• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% சொந்த மாநிலத்தவர்களுக்குத்தான்: ஹரியானா பாஜக அரசின் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 75% சொந்த மாநிலத்தவர்களுக்குத்தான்: ஹரியானா பாஜக அரசின் முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பு

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்.

இந்த 75% தனியார் துறை வேலைவாய்ப்பு உள்மாநில இட ஒதுக்கீட்டினால் தற்காலிகமாக பிரச்சினைகள் தீருமே தவிர நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஹரியானா மாநில பொருளாதார நலன்களுக்கு இவை நன்மை பயக்காது என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

  • Share this:
    தனியார் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் 75% ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்று அங்கு ஆளும் பாஜக -ஜேஜேபி கூட்டணி எடுத்த இட ஒதுக்கீடு முடிவுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதாவது இது சங்கத்தின் ஒரு நாடு ஒரு மக்கள் என்ற கொள்கைக்கு விரோதமானதாக உள்ளது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

    ரூ.50,000 வரையிலான மாதாந்திர சம்பளத்தில் ஆட்களைப் பணிக்குத் தேர்வு செய்யும் போது 75% தனியார் துறை வேலைவாய்ப்புகள் உள்மாநிலத்தவருக்கே வழங்க வேண்டும் என்று ஒரு புதிய இட ஒதுக்கீடு முறையை ஹரியாணா மாநிலம் பிரேரணை செய்திருந்தது.

    ஹரியாணா மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தினால் அந்த பாஜக அரசு ஆட்டம் கண்டு போயுள்ளது, அதனால் ஏற்படும் நெருக்கடிகளை சமாளிக்க இந்த அறிவிப்பை வெளியிட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ், “சங்கத்தின் கொள்கை ஒரு நாடு ஒரு மக்கள் என்பதே. இந்தச் சட்டம் அதற்கு எதிராக உள்ளது. அரசே புலம்பெயர் தொழிலாளர்களுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையைத்தான் அரசு கடைப்பிடிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

    ஆனால் கூட்டணியில் உள்ள ஜேஜேபி கட்சியின் அழுத்தத்தினாலும் விவசாயிகள் போராட்டத்தினாலும் பாஜக அரசுக்கு விருப்பமில்லாவிட்டாலும் இதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த அவசரம் காட்டி வருகிறது.

    மேலும் இந்த 75% தனியார் துறை வேலைவாய்ப்பு உள்மாநில இட ஒதுக்கீட்டினால் தற்காலிகமாக பிரச்சினைகள் தீருமே தவிர நீண்ட கால நோக்கில் பார்த்தால் ஹரியானா மாநில பொருளாதார நலன்களுக்கு இவை நன்மை பயக்காது என்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

    ஆனால் துணை முதல்வர் சவுதாலாவோ, பரிந்துரைகளை வரவேற்கிறோ, ஹரியானா மாநிலம் மட்டும் இதைச்செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: