கட்சி தாவியதற்காக தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளான எம்.எல்.ஏக்கள் 11 பேர் எம்.எல்.ஏக்களுக்கான சம்பளத்தை பெற்று வருவது தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் சிலர் முறைகேடாக மக்கள் வரிப்பணத்தை வீணடித்து பென்ஷன், பிற சலுகைகளை பெற்று வந்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆர்.டி.ஐ எனப்படும் தகவல் உரிமை பெறும் சட்ட செயற்பாட்டாளரான பி.பி.கபூர் என்பவர் கேட்ட கேள்விகளின் மூலம் இந்த உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
தனக்கு கிடைத்துள்ள ஆர்.டி.ஐ தகவல்களின்படி கபூர் கூறியதாவது, கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய ஹரியானா சபாநாயகர் சவுத்ரி சத்பிர் சிங் கடியான், கட்சி தாவிய 11 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி எம்.எல்.ஏ பதவியில் இருந்து நீக்கம் செய்தார். இந்த 11 பேரில் 6 பேரை உச்சநீதிமன்றமும் தகுதி நீக்கமும் செய்தது. இருப்பினும் அவர்கள் அனைவரும் எம்.எல்.ஏக்களுக்கான சம்பளமும், இதர படிகளையும் பெற்று வருகின்றனர்.
கபூர் மேலும் கூறுகையில், 2010ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, கட்சி தாவியவர்களை எம்.எல்.ஏக்களாக தகுதி நீக்கம் செய்யும் வகையில் கட்சித்தாவல் தடை சட்டத்தை கொண்டு வந்தது. இருப்பினும் 2010 முதல் இவர்கள் 11 பேரும் ஒவ்வொரு மாதமும் 51,800 ரூபாயை பென்ஷனாகவும், 10,000 ரூபாயை பயணப்படியாகவும் பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
Also Read:
லெஸ்பியன் உறவில் ஈடுபட்டதாக பள்ளியில் மாணவிகளை அடித்து அவமதித்த ஆசிரியை!
சட்டம் கொண்டு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்களே இதனை மீறியுள்ளனர். இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமல்ல, அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த நிலையில் ஹரியானா மாநில பாஜக தலைமை கூறுகையில், முறைகேடாக மக்கள் வரிப்பணத்தை பெற்று வரும் இது போன்ற நபர்கள் தாங்கள் வாங்கிய பணத்தை அரசின் கணக்கில் செலுத்த வேண்டும் இல்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Also Read:
769 நாள் லீவு போட்டுவிட்டு ஒரே நேரத்தில் இரட்டை சம்பளம் வாங்கிய கில்லாடி கணக்கு வாத்தியார் – ஏமாற்றியது எப்படி?
ஹரியானா மாநில பாஜக துணைத்தலைவரான மனிஷ் குரோவர் கூறுகையில், மக்களால் தேர்வு செய்யப்படும் எம்.எல்.ஏக்கள் தங்களின் சுயநலத்துக்காக கட்சி தாவுகின்றனர், இவர்களை நீதிமன்றமும் தகுதி நீக்கம் செய்கிறது. இது போன்ற நபர்கள் பென்ஷன் வாங்கக் கூடாது. அவர்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிய பணத்தை அரசின் கணக்கில் சேர்க்க வேண்டும், இல்லையென்றால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.