முகப்பு /செய்தி /இந்தியா / வெளிநாட்டவர்கள் பார்வையில் நம் நாடு எப்படி இருக்கும்? அசரடிக்கும் பதில் அளித்த தொழிலதிபர்

வெளிநாட்டவர்கள் பார்வையில் நம் நாடு எப்படி இருக்கும்? அசரடிக்கும் பதில் அளித்த தொழிலதிபர்

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா

ஐந்தாம் தலைமுறை தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்காவிடம் ஒரு அமெரிக்கர் கேட்ட கேள்விக்கு டிவிட்டரே அசந்து போகும் அளவுக்கு அழகான பதில் அளித்துள்ளார்.

  • Last Updated :

வெளிநாட்டவர்கள் பார்வையில் நம் நாடு எப்படி இருக்கும்? அல்லது இது வரை இந்தியாவை பார்த்திராதவர்களுக்கு இந்தியாவைப் பற்றி எப்படி நீங்கள் விளக்குவீர்கள்? ஐந்தாம் தலைமுறை தொழிலதிபரான ஹர்ஷ் கோயங்காவிடம் ஒரு அமெரிக்கர் கேட்ட கேள்விக்கு டிவிட்டரே அசந்து போகும் அளவுக்கு அழகான பதில் அளித்துள்ளார். இவருடைய பதிலால் நெகிழ்ந்து போன நெட்டிசன்கள் டிவீட்டை வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். ஹர்ஷ் கோயங்கா அப்படி என்ன பதில் சொன்னார்?

ஹர்ஷ் கோயங்கா RPG குழு நிறுவனங்களின் சேர்மன். ஒரு வியாபார சாம்ராஜத்தையே நிர்வகித்து வரும் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான ஹர்ஷ் கோயங்காவின் நகைச்சுவை உணர்வு சமூக வலைத்தளங்களில் பெரிதும் ரசிக்கப்பட்டு வருகின்றது. வேடிக்கையான, கிண்டலான பதிவுகளுக்கு தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது. சமீபத்தில், இவர் பகிர்ந்த ஒரு டிவீட் இந்தியாவின் மதிப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.

“இந்தியா எப்படி இருக்கும்” என்று என்னுடைய அமெரிக்க நண்பர் கேட்டார். அதற்கு பதிலாக கோயங்கா ஒரு சிறிய வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் பதிவேற்றினார்.

அந்த வீடியோவில், ஒரு மயில் தன்னுடைய தோகையை விரிக்கும் அற்புதமான காட்சி இருந்தது. மயில் தோகையை விரிப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இயற்கையின் அற்புதமான மற்றும் அதிசயிக்கத்தக்க படைப்புகளில் மயிலும் ஒன்று. அழகியல் நிறைந்த மயில் தொகை விரிக்கும் வீடியோவைப் பகிர்ந்து, இந்தியா இப்படி தான் இருக்கும் என்று அசத்தி இருக்கிறார் கோயங்கா.

ALSO READ |  திருமணத்தில் நடந்த விபரீதம் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

வேற்றுமையில் ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சாரம், உணவு, வாழ்க்கை முறையோடு ஒன்றியுள்ள பழக்க வழக்கங்கள் என்று வண்ணமயமான இந்தியாவை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் கோயங்கா. டிவிட்டரில் அவர் பகிர்ந்த வீடியோ இங்கே.

அழகான, நாள் முழுவதும் பார்த்து ரசிக்கும் படி ஏதேனும் ஒன்று கிடைத்துவிட்டால், நெட்டிசன்கள் சும்மா இருப்பார்களா? தங்கள் பங்குக்கு கோயங்காவின் டிவீட்டை ரீட்வீட் செய்து, வைரலாக பகிர்ந்து வருகிறார்கள்.

அற்புதமான இந்தியா என்ற கேப்ஷனுடன் பலரும் அந்த டிவீட்டை ரீட்வீட் செய்துள்ளனர். இதை விட இந்தியாவை யாரும் சிறப்பாக வெளிப்படுத்த முடியாது என்றும், காலை நேரத்துக்கான பர்ஃபெக்ட் மோட்டிவேஷன் என்றும், தங்களின் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் நெட்டிசன்கள்.

ALSO READ |  ஒரு பெண்ணின் வாழ்வையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு

top videos

    வேடிக்கையான பதிவுகள் மட்டுமின்றி, அவ்வபோது சூழலுக்கு ஏற்ப விழிப்புணர்வையும் மெல்லிய நகைச்சுவையோடு பகிர்வார் கோயங்கா. சில நாட்களுக்கு முன்பு, மாஸ்க் அணிந்து கொள்வது அசௌகரியம், அதை விட மூச்சு விட முடியாமல் சிரமப்படுவது, இருமலின் போது ரத்தம் வெளிப்படுவது, நுரையீரல் தீவிரமான பாதிப்பு, வெண்டிலேட்டர் வைப்பது, மருத்துவ செலவுகளுக்கான கடன் ஆகியவை ஏற்படுவது அதை விட அவஸ்தையானது என்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பதற்கான முக்கியத்துவத்தைப் பகிர்ந்ததும் வைரலாக பகிரப்பட்டது.

    First published:

    Tags: Businessman