முகப்பு /செய்தி /இந்தியா / சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை (வீடியோ)

சாட்சி சொல்ல வந்தவர் நடுரோட்டில் வெட்டிக்கொலை (வீடியோ)

ரமேஷை கோடாரியால் வெட்டும் ரவுடி

ரமேஷை கோடாரியால் வெட்டும் ரவுடி

  • 1-MIN READ
  • Last Updated :

தெலுங்கானாவில், நடுரோட்டில் ஒருவரை பட்டப்பகலில் கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத் ராஜேந்திர நகர் அத்தாபூர் என்ற பகுதியில், ரமேஷ் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் விரட்டி விரட்டி கோடாரியால் வெட்டிக் கொலை செய்தனர். அதனை அங்கி இருந்த பொது மக்களும் போலீசாரும் பார்த்து செய்வதறியாமல் அதிர்ச்சி அடைந்து நின்றனர். போக்குவரத்து போலீசாராலும் அதனை தடுக்க முடியவில்லை. தகவலறிந்து ஏசிபி அசோக் சக்ரவர்த்தி அங்கு விரைந்து வந்தார். அதன்பின் சம்பவம் நடந்த இடத்தில் இந்த கொலை குறித்து விசாரணையை தொடங்கினார்.

அப்போது முதற்கட்ட விசாரணையில், வெட்டிக்கொல்லப்பட்ட அந்த ரமேஷ் என்பவர் ஏ1 குற்றவாளி என்றும் ஒரு பழைய வழக்கிற்கு சாட்சியாக நீதிமன்றத்திற்கு சென்றுகொண்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது. மேலும் அது என்ன வழக்கு என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

First published:

Tags: A1 accuset, ACP Ashok Chakravarthy, Court Case, Hyderabad, Man killed, Murder, Telangana