உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புனித நகரமான ஹரித்வாரை ஐந்து அளவுருக்களின் அடிப்படையில் சிறந்த ஆஸ்ப்பிரஷனல்(ஆர்வமுள்ள) மாவட்டமாக NITI ஆயோக் அறிவித்துள்ளது. அதன் மூலம் மூன்று கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டை அம்மாவட்டம் பெற இருக்கிறது.
NITI ஆயோக்கின் ஆஸ்ப்பிரஷனல்(வளர்ச்சி -ஆர்வமுள்ள) மாவட்டங்கள் திட்ட இயக்குநர் ராகேஷ் ரஞ்சன் உத்தரகாண்ட் தலைமைச் செயலர் எஸ்.எஸ்.சந்து மற்றும் ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், அடிப்படைக் கட்டமைப்புக் கருப்பொருளில் ஹரித்துவார் மாவட்டம் முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன் மேலும் ₹ 3 கோடி ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்
மத்திய அமைச்சர்களுக்கு MPLAD எனும் திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டம் அல்லது ஒரு பகுதி ஒதுக்கப்படும். அந்த பகுதியை மேம்படுத்தி அதை ஒரு மாடல் பகுதியாக மாற்றவேண்டும். அதற்கென அவர்கர்களுக்கு நிதி ஒதுக்கப்படும். அதைக்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொள்வர்.
விரல் நுனியில் புஷ்அப்.. இதுவரை ஜிம்மிற்கு செல்லாத பஞ்சாப் இளைஞர் கின்னஸ் சாதனை!
நல்ல வளர்ச்சி காணும் மாவட்டங்களுக்கு ஆஸ்ப்பிரேசன் மாவட்ட அங்கீகாரம் வழங்கப்படும். அதன் மூலம் மேலும் குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதி மாவட்டத்தின் வளர்ச்சியை மேம்படுத்தும்.
“ஹரித்வார் மாவட்டம், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியாகும். அவர் அதை நாட்டின் நம்பர் 1 லட்சிய மாவட்டமாக மாற்றுவதில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். தற்போது ஹரித்துவார் ஆஸ்ப்பிரஷனல் மாவட்ட தகுதி பெற்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது” என்று ஹரித்வார் மாவட்ட ஆட்சியர் வினய் சங்கர் பாண்டே தெரிவித்தார்.
“ஆஸ்ப்பிரஷனல் மாவட்டங்களில் நாம் பின்தங்கிய ஒரு பிரிவு சுகாதாரத் துறை. ஒதுக்கப்பட்ட பணத்தைக் கொண்டு ரூர்க்கியில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் ஹரித்வாரில் உள்ள மாவட்ட மருத்துவமனைகள் உட்பட சுகாதாரத் துறையை மேம்படுத்த பயன்படுத்துவோம், ”என்று பாண்டே கூறினார்.
ஆசியாவில் சிறந்த தொழில்நுட்ப மையங்களின் பட்டியலில் பெங்களூரு இரண்டாவது இடம்!
ஆஸ்ப்பிரஷனல் மாவட்டங்கள் திட்ட விதிமுறைகளின்படி, மாவட்டங்கள் மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒரு செயல்திட்டத்தைத் தயாரித்து, திட்டத்திற்காக அமைக்கப்பட்ட அதிகாரமளிக்கப்பட்ட செயலர்கள் குழுவின் இறுதி ஒப்புதலுக்காக NITI ஆயோக்கிற்கு அனுப்ப வேண்டும்.
ஹரித்வார் மாவட்ட அதிகாரிகளுக்கு NITI ஆயோக் திட்ட இயக்குனர் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட ஆட்சியரின் சிறந்த பணியையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Niti Aayog, Piyush Goyal