உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் ஹர்திக் பட்டேல்

news18
Updated: September 12, 2018, 10:38 PM IST
உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார் ஹர்திக் பட்டேல்
உண்ணாவிரத்தின்போது ஹர்திக் பட்டேலை பரிசோதித்த மருத்துவர் (கோப்புப் படம்)
news18
Updated: September 12, 2018, 10:38 PM IST
படேல் இனத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த ஹர்திக் பட்டேல், 19 நாட்களுக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

படேல் இனத்தவர்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தியும், விவசாயிகள் கடனை ரத்து செய்ய வலியுறுத்தியும் படேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேல் கடந்த 19 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்தார்.

இந்நிலையில், பட்டிதார் இனத் தலைவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ஹர்திக் படேல், பழச்சாறு அருந்தி தனது உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார்.

முன்னதாக ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதத்தை ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்கினார். பல நாட்களாக தண்ணீர் கூட குடிக்காமல் இருந்ததால் ஹர்திக் படேல் சுமார் 20 கிலோ எடை வரை குறைந்து உடல் நலிவுற்றார். இதையடுத்து, அகமதாபாத்தில் உள்ள சோலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஹர்திக் பட்டேலின் கோரிக்கைக்கு குஜராத் அரசு செவி மடுக்கவேண்டுமென சமாஜ்வாதி கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...