காங்கிரஸில் இருந்து விலகிய ஹர்திக் படேல் வரும் ஜூன் 2ஆம் தேதி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் படேல் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களின் ஓட்டுகளை பெறும் கட்சியே ஆட்சி அமைக்கும் என கருதப்படுகிறது. இந்த சமூகத்தை சேர்ந்த ஹர்திக் படேல் சில ஆண்டுகளுக்கு முன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் ஹர்திக் படேலை 2019ல் கட்சியில் இணைத்தனர். அவருக்கு குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
சில நாட்களாக காங்கிரஸ் மேலிடம் மீது அதிருப்தியில் இருந்து வந்த ஹர்திக் படேல், சில நாட்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் இருந்து குஜராத் காங்., செயல் தலைவர் என்ற தன் சுய விபரத்தை நீக்கினார். இதனால், அவர் காங்கிரசில் இருந்து வெளியேறலாம் என தகவல் வெளியாகின.
இந்நிலையில், கடந்த மே.18ம் தேதியன்று அவர் காங்கிரஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து, ஹர்திக் படேல், காங்கிரசில் இருந்து விலகியது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. மேலும், அவர் உடனடியாக பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுதொடர்பாக ஹர்திக் படேல் கூறும்போது, பாஜகவில் இணைவதா அல்லது ஆம் ஆத்மியில் இணைவதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. மக்களின் விருப்பமே எனது முடிவாக இருக்கும். 3 வருடங்களை காங்கிரஸில் இருந்து வீணடித்துவிட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ஜூன் 2ம் தேதி ஹர்திக் படேல் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Congress, Hardik Patel