கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு!

Hardik Patel slapped பாஜகவுக்கு எதிராக கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்த ஹர்திக் படேல் சமீபத்தில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

news18
Updated: April 19, 2019, 1:24 PM IST
கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் பட்டேலை கன்னத்தில் அறைந்த நபரால் பரபரப்பு!
ஹர்திக் பட்டேல்
news18
Updated: April 19, 2019, 1:24 PM IST
குஜராத் மாநிலத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் பட்டேலை, திடீரென ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில் பட்டேல் சமூகத்திற்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரமாண்ட போராட்டம் நடந்தது.

இந்த போராட்டத்தை 24 வயது இளைஞர் ஹர்திக் பட்டேல் என்பவர் முன்னின்று நடத்தினர். இந்த சம்பவத்துக்கு அடுத்து ஹர்திக் பட்டேலை நாடே உற்று நோக்கியது.

பாஜகவுக்கு எதிராக கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் பிரசாரம் செய்தார். சமீபத்தில்  காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹர்திக் படேல் தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், சுரேந்தர் நகரில் இன்று நடந்த பிரசார கூட்டத்தில் ஹர்திக் பேசிக்கொண்டிருந்த போது, மேடையேறிய ஒரு நபர் திடீரென அவரது கன்னத்தில் அறைந்தார்.

இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இன்றைய முக்கியச் செய்திகள்...
First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...