ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி தலைமையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன் - பாஜகவில் இணைந்த ஹார்திக் படேல்

பிரதமர் மோடி தலைமையில் சிறு சிப்பாயாக பணியாற்றுவேன் - பாஜகவில் இணைந்த ஹார்திக் படேல்

பாஜகவில் இணைந்தார் ஹார்திக் படேல்

பாஜகவில் இணைந்தார் ஹார்திக் படேல்

Hardik Patel-பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறு சிப்பாயாக நாட்டின் சேவைக்காக இனி உழைக்க உள்ளேன் என ஹார்திக் படேல் ட்வீட் செய்துள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகிய இளம் தலைவர் ஹார்திக் படேல் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். பாஜக மாநிலத் தலைவர் சிஆர் பாட்டீல் தலைமையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்த இணைப்பு விழாவுக்கு முன்னதாக இன்று காலை தனது இல்லத்தில் ஹார்திக் படேல் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.

  அத்துடன் தனது ட்விட்டர் பதிவில் ஹார்திக் படேல், தேச நலன், மாநில நலன், மக்கள் நலன், சமூக நலத்திற்கான எனது பயணத்தில் புதிய அத்தியாயத்தை நான் தொடங்குகிறேன். நான் பாஜகவில் இணைந்து பணியாற்றவுள்ளேன். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒரு சிறு சிப்பாயாக நாட்டின் சேவைக்காக இனி உழைக்க உள்ளேன் என ட்வீட் செய்துள்ளார்.

  இந்தாண்டு இறுதியில் 182 இடங்களை கொண்டு குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பெரும்பான்மை சமூகத்தின் ஒன்றான படேல் சமூகத்தை சேர்ந்தவர் ஹார்திக் படேல். குஜராத் மாநில மக்கள்தொகையில் சுமார் 15% பேர் படேல் சமூகத்தை சேர்ந்தவர்கள். 180 தொகுதிகளில் 60 தொகுதிகளில் இவர்கள் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டு குஜராத் மாநிலத்தில் 2015ஆம் ஆண்டு பெரும் போராட்டத்தை நடத்தியவர் ஹார்திக் படேல். இந்த போராட்ட களத்தில் தான் ஹார்திக் படேலின் பொது வாழ்க்கை தொடங்கியது. 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த நிலையில், பிரதமராக பொறுப்பேற்ற பின் மாநிலத்தின் முதலமைச்சராக ஆனந்தி பென் படேல் தேர்வு செய்யப்பட்டார்.

  ஹார்திக் படேலின் இட ஒதுக்கீடு போராட்டத்தை அடுத்து, அனந்தி பென் படேல் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, விஜய் ரூபானியை முதலமைச்சராக பாஜக மேலிடம் நியமித்தது. இந்நிலையில், 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்னதாக ஹார்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இவரை 2020ஆம் ஆண்டு குஜராத் மாநில தலைவராக அக்கட்சி நியமித்தது. இந்நிலையில், அன்மை காலமாக காங்கிரஸ் மேலிடத்தின் மீது அதிருப்தி தெரிவித்து வந்த ஹார்திக் படேல் அக்கட்சியில் இருந்து கடந்த மாதம் விலகினார். தற்போது முதன் முதலாக எதிர்த்து போராட்டம் செய்த பாஜக கட்சியிலேயே தன்னை இணைத்துக் கொண்டார் ஹார்திக் படேல்.

  இதையும் படிங்க: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா பாதிப்பு

  இந்த இணைப்பு விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் தலைமை தாங்கி பங்கேற்கவில்லை. மாநிலத் தலைவர் சி ஆர் பாட்டீல் தலைமையிலான விழாவில் ஹார்திக் பாட்டீல் இணைந்து கொண்டார் என்பது கவனிக்கத்தக்கது.

  Published by:Kannan V
  First published:

  Tags: BJP, Gujarat, Hardik Patel