மக்களவைத் தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிட முடியாத சூழல்!

குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் பாஜக-வுக்கு செக் வைக்கும் வகையில் ஹர்திக் படேலை காங்கிரஸ் நிறுத்தத் தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: March 30, 2019, 8:44 AM IST
மக்களவைத் தேர்தலில் ஹர்திக் படேல் போட்டியிட முடியாத சூழல்!
ஹர்திக் படேல்
Web Desk | news18
Updated: March 30, 2019, 8:44 AM IST
படேல் சமூகத்தினருக்காக போராடியவரும், அண்மையில் காங்கிரசில் இணைந்தவருமான ஹர்திக் படேல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

படேல் இன மக்களுக்காகப் போராட்டங்கள் பல நடத்தி வருபவர் ஹர்திக் படேல். இவர் மார்ச் 12-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியின் முன்னிலையில் இணைந்தார். அதன்பின்னர்  நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியிலிருந்து போட்டியிடுவார் எனச் செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஹர்திக் படேல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணாம் 2015-ம் ஆண்டு கலவரம் ஏற்படுத்தியதாக கூறப்படும் வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டதேயாகும்.

மேலும் வரும் 4-ம் தேதிக்குள் இந்த வழக்கில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்பதால் ஹர்திக் படேல் போட்டியிட வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே உள்ளது. இதையடுத்து அவர் காங்கிரசுக்கு வாக்கு மட்டுமே கேட்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.

குஜராத்தின் ஜாம்நகர் தொகுதியில் பாஜக-வுக்கு செக் வைக்கும் வகையில் ஹர்திக் படேலை காங்கிரஸ் நிறுத்தத் தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

Also see.... பரிசுப்பெட்டி VS டார்ச்லைட் VS கரும்பு விவசாயி
First published: March 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...