“காங். ஆட்சியில் இது நடந்திருக்கா...?” சொந்த கட்சியினருக்கே ஷாக் கொடுத்த லடாக் பாஜக எம்.பி!

”காஷ்மீர் பிரச்னை தீராமல் இருந்ததற்கு நேருவின் அந்த செயலே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறிவருகிறது.”

“காங். ஆட்சியில் இது நடந்திருக்கா...?” சொந்த கட்சியினருக்கே ஷாக் கொடுத்த லடாக் பாஜக எம்.பி!
லடாக் எம்.பி
  • News18
  • Last Updated: August 18, 2019, 10:46 AM IST
  • Share this:
காங்கிரஸ் ஆட்சியில் லடாக் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் கூட நடந்தது இல்லை ஆனால் மோடி ஆட்சியில் ஐ.நா சபையில் லடாக் பற்றி பேசப்படுகிறது என்று அந்தத்தொகுதியின் எம்.பி பேசியுள்ளது சொந்த கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ நாடாளுமன்றம் மூலமாக மத்திய அரசு நீக்கியது. மேலும் ஜம்மு காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக ஆக்கப்பட்டது. லடாக் பகுதி சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.

காஷ்மீர் பிரிப்பு பிரச்னை தொடர்பாக இன்னும் பரபரப்பு ஓயாமல் இருந்து வருகிறது. இவ்விவகாரம் பற்றிய நாடாளுமன்ற விவாதத்தில் லடாக் தொகுதி பாஜக எம்.பி ஜம்யங் செரிங் நம்ங்யால் (Jamyang Tsering Namgyal) பேசியது பலத்த வரவேற்ப்பை பெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா என்று பலரும் அவரது பேச்சை பாராட்டினர். காஷ்மீரிகளால் லடாக் பகுதி மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


லடாக்


இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு சபைக்கு காஷ்மீர் விவகாரத்தை சீனா மற்றும் பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. சுமார் 54 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் விவகாரம் ஐ.நா பாதுகாப்புச் சபையில் விவாதிக்கப்பட்டது. எனினும், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால் சீனா மற்றும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

காஷ்மீர் விவகாரம் ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த லடாக் எம்.பி நம்ங்யால், “பிரதமர் மோடி எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக லடாக் பிரச்னை தற்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரை எதிரொலித்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். முந்தைய காங்கிரஸ் அரசுகளில் நாடாளுமன்றத்தில் கூட லடாக் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதில்லை.தன் நிலம் சார்ந்த பகுதிகளின் வளர்ச்சி தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரம். இதனால் அண்டை நாடுகளுக்கு பிரச்னை இருந்தால், அதற்கு நாம் எதுவும் செய்ய முடியாது. லடாக் என்பது இந்தியாவின் ஒரு பகுதி” என்று அவர் கூறினார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில்


காஷ்மீர் விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்ற நிலைப்பாட்டில் உள்ள பாஜக, இந்த பிரச்னை ஐ.நா.வில் விவாதிக்கப்பட்டதையே விரும்பவில்லை. மேலும், இதற்கு முன்னர் பிரதமர் நேரு காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா சபைக்கு எடுத்துச் சென்றதை இன்று வரை பாஜக குற்றம் சாட்டுகிறது.குறிப்பாக காஷ்மீர் பிரச்னை தீராமல் இருந்ததற்கு நேருவின் அந்த செயலே காரணம் என்று பாஜக தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், லடாக் எம்.பி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் விவாதிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளதுடன், லடாக் பற்றி விவாதிக்கப்பட்டதற்கு பெருமைப்படுவது போல கருத்து தெரிவித்துள்ளது சொந்த கட்சியினருக்கு ஷாக் ஆக அமைந்தது.

மேலும், மோடி நடவடிக்கையால் ஐ.நாவில் லடாக் பிரச்னை விவாதிக்கப்பட்டது என்று நம்ங்யால் கூறியது அக்கட்சியினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளே காஷ்மீர் விவகாரத்தை ஐநா வரை இழுத்துச் சென்ற நிலையில், நம்ங்யால் இப்படி கூறியிருப்பது அவரது பொது அறிவுத்திறனை காட்டுவதாக காங்கிரஸ் ஆதரவாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

First published: August 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்