Home /News /national /

பிறந்தது புதிய ஆண்டு 2022 ! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

பிறந்தது புதிய ஆண்டு 2022 ! அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்

புத்தாண்டு வாழ்த்து

புத்தாண்டு வாழ்த்து

Happy New Year 2022 | வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்18 தமிழ் இணையதளம் சார்பாக 2022 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் என்பது உலகம் தழுவியது. சாதி, மதம், இனம், மொழி கடந்து உலக மக்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டுகள் பெரும்பாலும் ஆலய வழிபாடுகளால் நிறைந்திருந்தால் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கேளிக்கையால் முக்கியத்துவம் பெறும். 

    இருப்பினும் ஆங்கிலப் புத்தாண்டில் கேளிக்கை மட்டும் பிரதானம் அல்ல. பலரும் புத்தாண்டுக்கு உறுதிமொழி எடுப்பார்கள். இந்த ஆண்டில் இதனை செய்து முடிக்க வேண்டும் பலரும் அதனை செய்து முடிக்க முயல்வார்கள்.

    ஆலயங்களில் வழிபாடுகள், கடற்கரை ஆட்டங்கள், மது விடுதிகளில் கொண்டாட்டம் என விதவிதமான கொண்டாட்டங்களின் நடுவே வழக்கமாக புத்தாண்டு பிறக்கும்.  கொரோனா பெருந்தொற்றால், கட்டுப்பாடுகளும், பாதுகாப்பும் நிறைந்த புதிய ஆண்டாக 2021-ம் ஆண்டு பிறந்தது. தற்போதும் அதேபோன்ற கட்டுப்பாடுகளுடன் 2022-ம் ஆண்டு பிறந்துள்ளது. ஆம், நாம் இப்போது 2022-ம் ஆண்டில் இருக்கிறோம்.

    2021 ஆம் ஆண்டின் பெரும்பகுதி கொரோனா, ஊரடங்கு, முகக்கவசம், என்று சுருங்கி இந்த நிமிடத்தோடு கடந்துவிட்டது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி என்ற ஆயுதத்தோடு 2021 ஆம் ஆண்டை வரவேற்றோம். தற்போது அதில் கிடைத்த நம்பிக்கையுடன் 2022-ம் ஆண்டை வரவேற்போம்.

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதுபோல், இனி உலக மக்கள் நலமோடும், வளமோடும் வாழ நல்வழி பிறக்கட்டும் . அன்பும், மகிழ்ச்சியும் பெருகட்டும்.

    வாசகர்கள் அனைவருக்கும் நியூஸ்18 தமிழ் இணையதளம் சார்பாக 2022 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: New Year 2022

    அடுத்த செய்தி