73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!

73rd Independence Day 2019: | 6-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி.

Web Desk | news18
Updated: August 15, 2019, 8:09 AM IST
73-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி!
73rd Independence Day 2019: | 6-வது முறையாக தேசியக் கொடியேற்றினார் பிரதமர் மோடி.
Web Desk | news18
Updated: August 15, 2019, 8:09 AM IST
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றினார். 

முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்ற பிரதமர் தேசியக் கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையாற்றி வருகிறார். செங்கோட்டை சுதந்திர தின விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க செங்கோட்டையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 500-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் பொருத்தியுள்ளனர்.

சென்னை கோட்டை கொத்தளத்தில் காலை 9 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைக்க உள்ளார். நல்ஆளுமை விருதுகளும், சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் 16 பேருக்கு சிறப்பு பதக்கங்களும் வழங்கப்பட உள்ளன.

அதீத துணிச்சலுக்கான விருதை நெல்லை மாவட்டம், கடையத்தில் வீட்டுக்குள் வந்த கொள்ளையர்களை விரட்டியடித்த சண்முகவேல், செந்தாமரை தம்பதிக்கு முதலமைச்சர் வழங்க உள்ளார்.

First published: August 15, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...