முகப்பு /செய்தி /இந்தியா / வண்ணங்களின் திருவிழா ஹோலி... வடஇந்தியாவில் உற்சாக கொண்டாட்டம்

வண்ணங்களின் திருவிழா ஹோலி... வடஇந்தியாவில் உற்சாக கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்

ஹோலி கொண்டாட்டம்

happy holi 2023 : ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

வண்ணங்களின் திருவிழாவான, இந்த விழா இந்த ஆண்டு நேற்றும் இன்றும் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் நேற்று பல்வேறு இடங்களில் கூடிய மக்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி உற்சாகமாக கொண்டாடினர். சில இடங்களில், நேற்றிரவு ஹோலிகா தகனம் கொண்டாடப்பட்டது. ராய்ப்பூர், சத்ராபூர் பகுதிகளில் பழைய கட்டைகளை எரித்து மக்கள் வழிபட்டனர். அமிர்தசரஸில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஹோலிகா தகனம் கொண்டாடினர்.

உத்தர பிரதேச மாநிலம் கோராக்பூரில் வண்ண திருவிழாவான ஹோலி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் சிவன் உட்பட பல்வேறு தெய்வங்களின் வேடமணிந்து சாம்பல் மற்றும் வண்ண பொடிகளை தூவி மகிழ்ந்தனர்.

இதே போன்று லக்னோவில் மத நல்லிணகத்தை வலியுறுத்தும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. கங்கா-ஜமுனி என்ற இடத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் சென்ற இந்துக்களை இஸ்லாமியர்கள் சகோதரத்துவத்துடன் வரவேற்றனர்.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். தீமைகள் விலக தீ மூட்டி பாதுகாப்பு படை வீரர்கள், ஹோலியை கொண்டாடினர்.இதே போன்று நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

First published:

Tags: Holi, Holi Celebration, Holi Festival