• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ”என் மகனை தூக்கிலிடுங்கள்.. பீகாரிகளை வெறுக்காதீர்கள்” - ஒரு தாயின் கதறல்

”என் மகனை தூக்கிலிடுங்கள்.. பீகாரிகளை வெறுக்காதீர்கள்” - ஒரு தாயின் கதறல்

மாதிரி படம்

மாதிரி படம்

எனது மகன் குற்றவாளி என தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், ஒட்டுமொத்த பீகாரிகளையும் தாக்காதீர்கள் என குஜராத் பாலியல் வழக்கில் கைதான இளைஞரின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    குஜராத்தில் கைக்குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக பீகார் இளைஞர் கைதாகியுள்ளார். இந்நிலையில், எனது மகன் குற்றவாளி என தெரிந்தால் தூக்கிலிடுங்கள். ஆனால், ஒட்டுமொத்த பீகாரிகளையும் தாக்காதீர்கள் என கைதான இளைஞரின் தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் 14 மாத கைக்குழந்தை கடந்த 28-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது. இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களை சேர்ந்த பலர் குஜராத்தில் வேலை செய்து வரும் நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் அவர்களுக்கு எதிராகவே திரும்பியது.

    இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, குஜராத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் தாக்குதலுக்கு உள்ளாயினர். சமூக வலைதளங்களிலும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பு செய்திகள் பரவியதால், உயிருக்கு பயந்து  வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தில் இருந்து வெளியேறி சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்த விவகாரம் தீவிரமடைந்ததை அடுத்து.  “குஜராத்திற்கு வேலை தேடி வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது என்பது எங்களது கடமை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நாங்கள் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வெளி மாநில இளைஞர்களை தாக்கியது தொடர்பாக இதுவரைக்கும் நாங்கள் 450 பேரை கைது செய்துள்ளோம்” என குஜராத் அரசு விளக்கமளித்துள்ளது.

    மேற்கண்ட பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடையதாக பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் உள்ள மஞ்ஹி பகுதியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கைதான இளைஞரின் தாய் குஜாராத் மாநிலத்தவர்களுக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். “எனது மகன் குற்றவாளி எனத்தெரிந்தால் அவனை தூக்கிலிடுங்கள். ஆனால், எனது மகன் செய்த பாவத்திற்காக ஒட்டு மொத்த பீகாரிகளையும் தாக்கவோ, மாநிலத்தை விட்டு வெளியேற்றவோ வேண்டாம்” என அவர் கூறியுள்ளார்.

    இந்த வழக்கில் கைதான இளைஞர் கடந்த 2016-ம் ஆண்டு வீட்டை விட்டு ஓடி வந்த நண்பர்களுடன் சேர்ந்து குஜராத்துக்கு வந்து கூலி வேலை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: