ஹோம் /நியூஸ் /இந்தியா /

அடிபம்பில் மோதிய மோட்டர் பைக்.. வயிற்றை துளைத்து உள்ளே சிக்கிய கைப்பிடி.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

அடிபம்பில் மோதிய மோட்டர் பைக்.. வயிற்றை துளைத்து உள்ளே சிக்கிய கைப்பிடி.. இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய மக்கள்

விபத்தில் சிக்கியவரை காப்பாற்றிய மக்கள்

விபத்தில் சிக்கியவரின் வயிற்றை துளைத்து உள்ளே புகுந்த அடிப்பம்பின் கைப்பிடி எடுக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியில் உள்ள இந்திரா காலனியை சேர்ந்த நாகராஜ். நேற்று அதிகாலை வேலை முடிந்து கனிக்கிரியில் உள்ள ராஜீவ் நகரில் மோட்டார் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் உள்ள அடிப்பம்பு மீது மோதியது.

அப்போது அடிபம்பின் கைப்பிடி வயிற்றை துளைத்து உள்ளே சென்று விட்டது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக கட்டரை கொண்டு வந்து கைப்பிடியை வெட்டி அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வயிற்றிக் சிக்கி கொண்டிருந்த கைப்பிடியின் துருப்பிடித்த பாகங்கள், உலர்ந்த பெயிண்ட் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். தற்போது அவர் அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

செய்தியாளர் : புஷ்பராஜ் (திருப்பதி)

First published:

Tags: Accident, Accident case, Tirupathi