Home /News /national /

33 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுவன் தனது வரைபடத்தின் மூலம் குடும்பத்துடன் இணைந்த சம்பவம்

33 ஆண்டுகளுக்கு முன்பு கடத்தப்பட்ட சிறுவன் தனது வரைபடத்தின் மூலம் குடும்பத்துடன் இணைந்த சம்பவம்

வரைபடம்

வரைபடம்

சிறு வயதில் தான் பிறந்து வளர்ந்த கிராமம் எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்திருந்த லீ, வரைந்து, அதை வைத்து தனது ஊரைக் கண்டுபிடித்தது சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மாறியுள்ளது.

33 ஆண்டுகளுக்கு முன்பு தனது பக்கத்து வீட்டுக்காரரால் கடத்தப்பட்ட சிறுவன் கையால் வரைந்த வரைபடத்தை வைத்துக் கொண்டு தனது சொந்த ஊரைக் கண்டுபிடித்து அம்மாவுடன் இணைந்தது அனைவரையும் நெகிழ்த்தியுள்ளது. திரைப்படங்களில் இதைப் போன்ற பல கதைகளை பார்த்திருப்போம். சிறுவர்களாக இருக்கும் போது தாய் தந்தையரை விட்டு பிரிந்து செல்பவர்கள் அல்ல சகோதர சகோதரிகள் விட்டுப் பிரிந்து செல்வார்கள் அல்லது கடத்தப்படுபவர்கள் வளர்ந்த பின்பு ஒன்றிணைவது பல வெற்றி படங்களில் கதையாக அமைந்துள்ளது. ஆனால். இதே போன்று நிகழ்வுகள் அவ்வப்போது உண்மையாகவும் நிகழ்ந்துள்ளன.

1989 ஆம் ஆண்டு சீனாவில் ஒரு கிராமத்திலிருந்து லீ ஜிங்வெய் என்ற சிறுவன் தனது பக்கத்து வீட்டில் வசித்தவரால் கடத்தப்பட்ட செய்தி சீனாவின் முன்னணி நாளிதழில் வெளியானது. இப்போது லீயின் வயது 37. சிறு வயதில் தான் பிறந்து வளர்ந்த கிராமம் எப்படி இருக்கும் என்பதை நினைவில் வைத்திருந்த லீ, வரைந்து, அதை வைத்து தனது ஊரைக் கண்டுபிடித்தது சுவாரஸ்யமான நிகழ்வுகளாக மாறியுள்ளது.

'எனக்கு நான்கு வயதாக இருக்கும்பொழுது வழுக்கைத் தலையுள்ள என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் எண்ணை தூக்கிக் கொண்டு சென்றார்' என்று தான் எவ்வாறு கடத்தப்பட்டார் என்பதை லீ தெரிவித்தார்.

லீ வேறு ஒரு குடும்பத்திற்கு விற்கப்பட்டதாகவும், பின்னர் லீ தனது சொந்த கிராமத்தில் இருந்து 1700 மைல்கள் தொலைவில் வசித்து வந்ததாகவும் தெரிவித்தார். லீயை வளர்த்த பெற்றோர்களும் டிஎன்ஏ மூலமாகவும், லீயின் குடும்பத்தினரை கண்டுபிடிக்க முடியாததால் லீ தன்னுடைய கிராமம் எப்படி இருக்கும் என்ற வரைபடத்தை வரைந்து தன் குடும்பத்தை தேடும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறினார்.

ALSO READ |  அன்னை தெரசா அறக்கட்டளை உரிமத்தை புதுப்பித்த மத்திய அரசு...!

தான் பிறந்து வளர்ந்த கிராமம் எப்படி இருக்கும் என்பதை வரைந்த லீ, அதை கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய நாளன்று சீனாவின் சமூக வலைத்தளமான Douyin என்ற தளத்தில் பதிவேற்றி இருந்தார்.

ஒரு கிராமம் எப்படி இருக்கும் என்ற வரைபடத்தை வைத்து சிறு வயதில் காணாமல் போன ஊர எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று தோன்றலாம். ஆனால் லீ வரைந்த படத்தில், அந்த ஊரின் பெயர் என்ன என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு போதுமான அவ்வளவு விவரங்கள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த ஊரில் இருந்த கட்டிடங்கள் மட்டுமல்லாமல் அந்த ஊரில் பெரிய பெரிய மர பக்கெட்டுகளில் தான் அரிசி சமைப்பார்கள் என்பதையும் அந்த வரைபடத்தில் தெளிவாகக் காட்டியிருந்தார்.

ALSO READ |  காஷ்மீரில் அதிக பனிப்பொழிவு காரணமாக  போக்குவரத்து சேவை கடும் பாதிப்பு...!

யுன்னான் மாகாணத்தில் உள்ள சோடாங் நகரின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் போலீசாரும் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட அந்த புகைப்படத்தை கண்டு, அது எந்த கிராமம் என்பதை இறுதி செய்தனர். பின்னர், லீ தன்னுடைய ஊருக்குச் சென்று தனது குடும்பத்தினரைப் பார்க்கும் முன்பு டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, லீயின் தாயார் அங்கு தான் விசிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டபின் தன்னுடைய கிராமத்திற்கு சென்றார்.



லீ 33 ஆண்டுகளுக்குப் பிறகு தனது அம்மாவைப் பார்க்கும் வீடியோ நெட்டிசன்களை நெகிழ்த்தியுள்ளது.

https://youtu.be/lk1Z0T54nVM

இப்போது லீக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். கடத்தப்பட்டு வேறு குடும்பத்திற்கு விற்கப்பட்டாலும், லீயின் வளர்ப்பு பெற்றோர்கள் அவரை நல்ல நபராக வளர்த்துள்ளார்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Christmas, Christmas eve

அடுத்த செய்தி