• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகள் போராட்ட களத்தில் சிதைக்கப்பட்ட உடல்.. கொடூரமான கொலை.. வைரல் வீடியோ

விவசாயிகள் போராட்ட களத்தில் சிதைக்கப்பட்ட உடல்.. கொடூரமான கொலை.. வைரல் வீடியோ

Farmers Protest

Farmers Protest

போராட்ட மேடை அருகே போலீசாரால் போடப்பட்டிருந்த பேரிகேட் தடுப்பின் மீது ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 5 மணிக்கு கண்டறியப்பட்டது. இந்த சடலத்தின் கை மணிக்கட்டு, கால் வெட்டப்பட்டு. சித்ரவதை செய்து உடல் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

  • Share this:
டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் களத்தின் மிக அருகே இன்று அதிகாலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் போலீஸ் பேரிகேட் மீது கொலை செய்து கட்டப்பட்டிருந்த ஒருவரின் உடல் கண்டறியப்பட்டது. ரத்தத்தை உறைய வைக்கும் வகையிலான இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளத்தின் வைரலாகி வருகின்றன. அதில் அந்த இளைஞரை கொலை செய்வதற்கு முன் அந்த நபரின் கையை வெட்டியதுடன், கொலை செய்தவர்கள் மனிதாபிமானமின்றி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் பஞ்சாப், ஹரியானா மாவட்ட விவசாயிகள் கடந்த ஓராண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்கள் அங்கேயே குடில் அமைத்து தங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி அருகே விவசாயிகள் போராட்டம் நடைபெறும் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குந்திலி எனும் பகுதியில் உள்ள முக்கிய போராட்ட மேடை அருகே போலீசாரால் போடப்பட்டிருந்த பேரிகேட் தடுப்பின் மீது ஆண் ஒருவரின் சடலம் இன்று அதிகாலை 5 மணிக்கு கண்டறியப்பட்டது. இந்த சடலத்தின் கை மணிக்கட்டு, கால் வெட்டப்பட்டு. சித்ரவதை செய்து உடல் சிதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் கிடைத்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Also Read: ஓவர் டைம், பணிச்சுமைக்கு எதிராக சீனாவில் தொடங்கிய ‘996’ பிரச்சார இயக்கம்

கொல்லப்பட்ட நபர் பஞ்சாப் மாநிலம் டாம் டரன் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க லக்பிர் சிங் எனவும் தலித் வகுப்பைச் சேர்ந்த இவருக்கு மனைவி, தங்கை, 8, 10 மற்றும் 12 ஆகிய வயதுகளில் மூன்று மகள்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் கொல்லப்பட்ட நபர் கூலித்தொழிலாளி எனவும் இவர் சில நாட்களாக சீக்கிய போர்க் குழுவான நிகாங்க் எனும் அமைப்பினருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

நிகாங்க் குழுவினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக லக்பிர் சிங் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று வெளியான வீடியோக்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. லக்பிர் சிங்கினை அடித்து துன்புறுத்தி அவரின் கை மணிக்கட்டை நிகாங் அமைப்பினர் துண்டித்திருப்பதாக கூறப்படுகிறது. ஈவு இரக்கமின்றி அரங்கேறியிருக்கும் இச்சம்பவம் கதிகலங்கச் செய்வதாக உள்ளது.

Also Read: 17,000 பேரை புதிதாக வேலைக்கு சேர்க்கும் விப்ரோ நிறுவனம்!

சீக்கிய மத குருவான குரு கிராந்த் சாஹிப் குறித்து, லக்பிர் சிங் ஆட்சேபிக்கத்தக்க கருத்தை கூறியதால் ஆத்திரத்தில் நிகாங்க் குழுவினர் லக்பிர் சிங்கை கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.

இதனிடையே இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். விவசாயிகள் போராட்டக் களத்தின் அருகே அரங்கேறிய இந்த கொடூர கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: