ஹோம் /நியூஸ் /இந்தியா /

ஹம்பி முதல் சிலிகுரி வரை... ஜி20 கூட்டங்கள் நடைபெற இருக்கும் பாரம்பரிய தலங்கள் !

ஹம்பி முதல் சிலிகுரி வரை... ஜி20 கூட்டங்கள் நடைபெற இருக்கும் பாரம்பரிய தலங்கள் !

ஓராண்டிற்குள் இந்தியாவில் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் 55 வரலாற்று தளங்கள் உட்பட 200 இடங்களில் G20 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஓராண்டிற்குள் இந்தியாவில் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் 55 வரலாற்று தளங்கள் உட்பட 200 இடங்களில் G20 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

ஓராண்டிற்குள் இந்தியாவில் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களில் 55 வரலாற்று தளங்கள் உட்பட 200 இடங்களில் G20 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

நவம்பர் 1 முதல் ஓராண்டிற்கு ஜி 20 நாடுகளின் தலைமை பதவியேற்கவுள்ள இந்தியா, நாடு முழுவதும் உள்ள பெரிய பெருநகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரை, 55 வரலாற்று இடங்களில் G20 கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் குழு, வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்களைத் தேர்ந்தெடுப்பதன் பின்னணியில், புராதனச் சின்னங்களில் கவனம் செலுத்தவதாக  கூறியுள்ளனர். ஒரு ஆண்டில் சுமார் 200 G20 கூட்டங்களை இந்தியா நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டங்கள் அடுத்த ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வருடாந்திர உச்சிமாநாட்டுடன் முடிவடையும்.

இந்த 55 இடங்களும் அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களை உள்ளடக்கும். தற்போதைய நிலையில் சிலிகுரி, ரன் ஆஃப் கட்ச், ஹம்பி மற்றும் கஜுராஹோவில் கூட்டங்கள் நடத்த முடிவாகியுள்ளது.

ஹம்பி:

கர்நாடகாவில் உள்ள ஹம்பி, மத்தியப் பிரதேசத்தில் உள்ள கஜுராஹோ இந்தியாவில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலங்களில் ஒன்றாகும். விஜயநகரப் பேரரசின் தலைநகர் ஹம்பி தலத்தில் உள்ள நினைவுச்சின்னங்களின் குழுவானது கி.பி. 14-16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

கஜுராஹோ:

கஜுராஹோவில் உள்ள பழமையான கோயில்கள், அவற்றின் நேர்த்தியான செதுக்கல்களுக்காக உலகளவில் புகழ் பெற்றவை. சண்டேலா வம்சத்தின் போது கட்டப்பட்ட இது மத்தியப் பிரதேசத்தின் சதர்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமாகும்.

யுனெஸ்கோவின் இணையதளத்தின் படி, இந்து மற்றும் ஜைன மதத்தைச் சேர்ந்த சுமார் 20 கோயில்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அவை மூன்று வெவ்வேறு குழுக்களாக உள்ளன.

கட்ச்:

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ரன் ஆஃப் கட்ச் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும், மேலும் அதன் விரிவான உப்பு சதுப்பு நிலம் , பாலைவன பூங்கா மற்றும் கண்ணாடி பதிக்கப்பட்ட கட்ச்சி எம்பிராய்டரி ஆகியவற்றிற்காக அறியப்படுகிறது.

வெள்ளை மணலால் நிறைந்த பிளமிங்கோ நகரமான இந்த பகுதியில் சூரிய அஸ்தமனத்தை காண்பது சிறப்பான அனுபவத்தை தரும்.

சிலிகுரி:

சிலிகுரி மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு முக்கிய சுற்றுலா நகரமாகும், மேலும் இது தேயிலை மற்றும் மழைக்காட்டு மரத்திற்கு பிரபலமானது.

G20 கூட்டங்கள் பாரம்பரிய இடங்களுக்கு அருகில் அரங்கங்களில் நடத்தப்படும். பங்கேற்பாளர்கள் அருகில் உள்ள நினைவிடங்களுக்கும் பாரம்பரிய தலங்களுக்கும் அழைத்து செல்லப்படுவர் என்று தரப்பில் கூறப்படுகிறது. இதன்மூலம் பாரம்பரிய தளங்களில் கவனத்தை ஈர்க்கும் என்று நம்புகின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: G20 Summit, Travel