ஹோம் /நியூஸ் /இந்தியா /

நிறைவு பெற்றது அல்வா கிண்டும் நிகழ்வு! முதல் பட்ஜெட்டுக்கு தயாராகிறார் நிர்மலா சீதாராமன்

நிறைவு பெற்றது அல்வா கிண்டும் நிகழ்வு! முதல் பட்ஜெட்டுக்கு தயாராகிறார் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்

நிதியமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பகுதியில்தான் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

மத்திய அரசின் முதல் தகவல் அறிக்கை, ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று அல்வா கிண்டும் பணி நடைபெற்றது.

மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கை அச்சுக்கு தயாராகி விட்டது என்பதை தெரிவிக்கும் வகையில், நிதியமைச்சக அலுவலகத்தில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜுலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.

நிர்மலா சீதாராமன்

இதற்காக பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அல்வா கிண்டும் நிகழ்வு ஒரு சம்பரதாய நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஒவ்வொரு ஆண்டும் அந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.

இதையடுத்து நிதித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தயார் செய்யப்பட்ட அல்வாவை நிர்மலா சீதாராமன் வழங்கினார். நிதியமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பகுதியில்தான் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். அல்வா கிண்டும் நிகழ்வு முடிந்து, அதை சாப்பிட்டு முடித்த பிறகு, பட்ஜெட் தயாரிபு பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் நார்த் பிளாக்கில் உள்ள பேஸ்மென்ட் அறைக்குப் போய்விடுவார்கள்.

அங்குதான் பட்ஜெட் அச்சிடும் பணி நடைபெறும். 10 நாள்கள் அவர்கள், அங்கேயேதான் தங்கியிருப்பார்கள். வெளியே வர மாட்டார்கள். பட்ஜெட் குறித்த தகவல்கள் வெளியே கசிந்து விடக் கூடாது என்பதற்காகதான் இந்த ஏற்பாடு. நிதியமைச்சர் மட்டும் வெளியே வருவார். அவரும் கூட பட்ஜெட் தயாரானபிறகுதான் வெளியே வருவார்.

Also see:

Published by:Karthick S
First published:

Tags: Minister Nirmala Seetharaman, Union Budget 2019