Home /News /national /

டிரெண்டிங்கில் ஹல்திராம்... மிக்சர் பாக்கெட்டில் சர்ச்சை கிளப்பிய செய்தியாளர்!

டிரெண்டிங்கில் ஹல்திராம்... மிக்சர் பாக்கெட்டில் சர்ச்சை கிளப்பிய செய்தியாளர்!

சர்ச்சை வீடியோவை அந்த செய்தி நிறுவனம், சமூகவலைதளங்களில் வெளியிடவே, இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சர்ச்சை வீடியோவை அந்த செய்தி நிறுவனம், சமூகவலைதளங்களில் வெளியிடவே, இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

சர்ச்சை வீடியோவை அந்த செய்தி நிறுவனம், சமூகவலைதளங்களில் வெளியிடவே, இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது

    ஹிஜாப், ஹலால் சர்ச்சையை தொடர்ந்து, தற்போது உருது சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

    கர்நாடகாவில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு பாஜக மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த விவகாரம் உயர்நீதிமன்றத்திற்கு சென்றபோது, அரசின் அறிவிப்புக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

    தொடர்ந்து 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டிருந்தனர். ஹிஜாப் விவகாரம் அடுத்தடுத்த மாநிலங்களில் பல்வேறு பிரச்சினையை கிளப்பி வருகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு ஹலால் என்று விற்பனை செய்யப்படும் முஸ்லிம்கள் கடை இறைச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று சில அமைப்புகள் பிரச்னையை கிஐளப்பின. இந்த சர்ச்சையும் இன்னும் அடங்கவில்லை.

    இதைத்தொடர்ந்து, மசூதிகளில் ஒலி பெருக்கிகளை வைக்கக் கூடாது என்று சில அமைப்புகள் பேசத் தொடங்கின. இதற்கான விவாதங்களும் இன்னும் நடந்து வரும் நிலையில், தற்போது மிக்சர் பாக்கெட்டில் உருது மொழி அச்சிடப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.



    இதனால், வழக்கம் போல் இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழத்தொடங்கியுள்ளன. இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.



    இதுதொடர்பான வீடியோவில், ஹல்திராம் விற்பனை நிலையம் ஒன்றில், செய்தியாளர் ஒருவர் மிக்சர் பாக்கெட்டில் எதற்காக உருது மொழியில் அச்சிடப்பட்டுள்ளது? என்று விற்பனை பிரிவில் உள்ள பெண்ணிடம் அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்புகிறார். அதற்கு அந்த பெண்மணி பிடித்திருந்தால் வாங்குங்கள், இல்லாவிட்டால் வாங்க வேண்டாம் என பதிலளிக்கிறார். ஆனால் தொடர்ந்து அந்த செய்தியாளர், விடாமல் வாக்குவதாம் செய்கிறார்.

    இந்த சர்ச்சை வீடியோவை அந்த செய்தி நிறுவனம், சமூகவலைதளங்களில் வெளியிடவே, இவ்விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலர் இதற்கு ஆதரவாகவும் சிலர் இதற்கு எதிராவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



    ஹல்திராம் உணவு பொருள் நவராத்திரியில் இந்து மக்களால் அதிகம் பயன்படுத்துவது வழக்கம் என்றும், அதில் உருது மொழி அச்சடிக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளை இந்து மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    சிலர் உருது மொழி இருக்கிறது என்கிற காரணத்திற்காக ஹல்திராம் உணவு பொருளை புறக்கணிப்பீர்கள் என்றால் இந்திய ரூபாய் நோட்டுகளிலும் உருது மொழி இருக்கிறது அதையும் புறக்கணியுங்கள் என பதில் கூறி வருகின்றனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Trending

    அடுத்த செய்தி