பெண்ணின் தலையில் எச்சில் துப்பி சிகையலங்காரம் செய்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானதால் பிரபல ஹேர்ஸ்டைலிஸ்ட் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர்நகரில் உள்ள கிங் வில்லா ஓட்டலில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக, சிகையலங்காரம் குறித்த பயிற்சி வகுப்பு ஒன்று நடைபெற்றது. இதில் டெல்லியைச் சேர்ந்த நாட்டின் பிரபல சிகையலரங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சிகையலங்காரம் குறித்த நிபுணத்துவங்களை கற்று அறிய பல நகரங்களில் இருந்தும் சலூன் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பாக பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சிகையலங்காரம் குறித்த தகவல்களை செய்முறையாக பகிர்ந்த சிகையலரங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப், செய்முறைக்காக மேடைக்கு பெண் ஒருவரை வரவழைத்து சிகையலங்கார சேரில் அமரவைத்தார். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களிடம் பேசியவாறே இருந்த ஜாவேத், சிகைலயங்காரம் செய்யும் போது அருகில் தண்ணீர் இல்லை என்றால் பரவாயில்லை நீங்கள் எச்சில் துப்பிக்கொள்ளலாம் என கூறி மேடையில் அமரவைக்கப்பட்டிருந்த பெண்ணின் தலை மீது எச்சில் துப்பியுள்ளார்.
This video is too disgusting to post. But I think this should reach everyone! Shame on you #JavedHabib pic.twitter.com/aP9HJjYiJ9
— Vikas Pandey (@MODIfiedVikas) January 6, 2022
அங்கிருந்த நபர் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட,, அந்த வீடியோ வைரலாக பரவியது. இதனையடுத்து, பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக நெட்டிசன்கள் பலரும் ஜாவேத் ஹபீப்-ஐ வறுத்தெடுத்தனர்.
Also read: '15 நிமிஷம் பிரதமர் காத்திருந்தது ஒரு பிரச்னையா, ஆனா விவசாயிகள்' - விளாசும் சித்து
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பரோத் பகுதியைச் சேர்ந்த அழகு நிலையம் நடத்தும் பூஜா குப்தா என்பவர் மன்சூர்பூர் காவல்நிலையத்தில் தன்னிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக ஜாவேத் ஹபீப் மீது புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பூஜா குப்தா கூறுகையில், நான் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது முடிவெட்டுவதாக கூறி ஜாவேத் ஹபீப் என்னை மேடைக்கு அழைத்தார். பின்னர் என் தலையில் எச்சில் துப்பினார். என்னிடம் அவர் அநாகரிகமாக நடந்து கொண்டு அவமதித்ததால் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என்றார்.
தேசிய மகளிர் நல ஆணையமும் இந்த விவகாரத்தை அறிந்து தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
View this post on Instagram
இதனிடையே இந்த சம்பவம் சர்ச்சையாக மாறிய நிலையில் ஜாவேத் ஹபீப், இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, மன்னிப்பு கோரியுள்ளார். “நிகழ்வின் போது பேசிய சில வார்த்தைகள் மக்களை புண்படுத்துவதாக உள்ளது. இந்த அமர்வுகள் வல்லுநர்களால் கலந்துகொள்ளப்படுகின்றன, அவை பொதுவாக நீண்டதாக இருக்கும். சில நேரங்களில், நீங்கள் நகைச்சுவையை பராமரிக்க வேண்டும் என்பதற்காக அவ்வாறு பேசினேன். இருந்த போதிலும், நீங்கள் புண்பட்டிருந்தால், என்னை மன்னியுங்கள் என்று என் இதயத்திலிருந்து சொல்கிறேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hair, Viral Video