முகப்பு /செய்தி /இந்தியா / H3N2 வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்..? காய்ச்சல் பரவல் எப்போது குறையும்..? மத்திய அரசு வெளியிட்ட தகவல்..!

H3N2 வைரஸ் யாரை அதிகம் பாதிக்கும்..? காய்ச்சல் பரவல் எப்போது குறையும்..? மத்திய அரசு வெளியிட்ட தகவல்..!

H3N2

H3N2

H3N2 Virus | மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொற்று பரவல் தொடர்பாக முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Delhi, India

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே H3N2 வைரஸ் என்ற இன்ஃபுளூயன்சா காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இதன் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சகங்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு ஆலோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கி வருகின்றன.

நாடு முழுவதும் 451 பேருக்கு H3N2 வைரஸ் பாதிப்பு , 8 பேருக்கு H1N1 வைரஸ் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவிக்கின்றது. அதேபோல், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களில் தலா ஒருவர் H3N2 தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டின் அனைத்து மாநிலங்களும் உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தொற்று பரவல் தொடர்பாக முக்கிய தகவல்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், " பருவகால வைரஸ் காய்ச்சல் தொடர்பாக ஒருங்கிணைந்த நோய்க் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. H3N2 வகை காய்ச்சல் தொடர்பாகவும், இணை நோய்கள், உயிரிழப்புகள் குறித்தும் சுகாதார அமைச்சகம் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.

இணை நோய்களைக் கொண்ட குழந்தைகள் மற்றும் முதியோர் இந்த பருவகால வைரஸ் காய்ச்சலால் அதிகம் பாதிக்கபடக்கூடியவர்களாக உள்ளனர். இந்தியாவில் இரு பருவ காலங்களில் காய்ச்சல் பாதிப்பு உச்சத்தை எட்டுகிறது. மழைக் காலத்துக்குப் பின்பும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலத்திலும் இந்தியாவில் காய்ச்சல் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த பருவகால வைரஸ் காய்ச்சல் மார்ச் இறுதியிலிருந்து குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: இந்தியாவில் ஒரு கோடி முதியவர்களுக்கு ஞாபக மறதி நோய்.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

நோயாளிகளை வகைப்படுத்துதல், சிகிச்சை முறைகள் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணையதளம், தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் இணையதளம் ஆகியவற்றிலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. " இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Fever, Health, Virus