உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் நடைபெற்ற கள ஆய்வில் மசூதி வளாகத்தில் சிவ லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து அமைப்பு தரப்பு வழக்கறிஞர் சுபாஷ் நந்தன் சதுர்வேதி கூறியுள்ளார். இதையடுத்து அந்த பகுதியை சீலிட்டு மூட வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் அருகே இந்த கியான்வாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் ஔரங்கசீப்பால் கட்டப்பட்ட இந்த மசூதியில் இந்து கோயில் இருந்தாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஒரு பெண்கள் குழு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இதையடுத்து இது தொடர்பாக அந்த மசூதியை வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. முதலில் இந்த கள ஆய்வுக்கு மசூதி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இரு நாள் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இன்று காலை 8 மணிக்கு மூன்றாம் நாள் கள ஆய்வு தொடங்கப்பட்டது.
இன்றைய கள ஆய்வில் மசூதியில் உள்ள வூசு(wuzu) என்ற இடத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக இந்து மனுதாதர் வழக்கறிஞர் நீதிமன்றத்தில். இந்த இடம் தொழுகைக்கு செல்பவர்கள் அதற்கு முன்னதாக நீரால் முகம்,கை கால்களை கழுவிக்கொள்ளும் இடமாகும். இந்த இடத்தில் சிவலிங்கம் இருப்பதாகக் கூறப்பட்டதை அடுத்து, அந்த பகுதியை சீலிட்டு மூட மாவட்ட ஆட்சியர் கவுஷல் ராஜ்ஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேவேளை, இஸ்லாமியர்கள் இந்த மசூதியில் தொழுகை செய்து வழிபடுதவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
இந்த கள ஆய்வு குறித்த முடிவுகளை வெளியே கூற முடியாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சிவ லிங்கம் குறித்த செய்தி வெளியானதை அடுத்து உத்தரப் பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா தனது ட்விட்டர் பதிவில், எவ்வளவுதான் முயற்சித்தாலும் உண்மையை மறைக்க முடியாது என ட்வீட் செய்துள்ளார். அதேவேளை, ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி, பாபர் மசூதிக்குப் பின்னர் மற்றொரு மசூதியை இழக்க நாங்கள் தயாராகவில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: தாஜ்மகால் சிவாலயமா... 22 அறைகளின் ரகசியம் என்ன?
இந்நிலையில், கள ஆய்வை நிறுத்தக் கோரி மசூதி சார்பில் இன்டாசாமியா என குழு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்துருசூட் தலைமையிலான அமர்வு நாளை விசாரிக்கவுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh, Varanasi