ஹரியானாவின் குருகிராம் பகுதியில் இஸ்லாமியர்கள் பொதுவெளியில் தொழுகை நடத்த வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், அங்குள்ள சீக்கிய அமைப்பு தங்கள் இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் இஸ்லாமியர்கள் பொது இடங்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதற்கு வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் நடைபெற்ற குருகிராம் மாநகராட்சி ஆணையம் தொழுகை நடத்துவதற்கான இடங்களின் எண்ணிக்கையை 106ல் இருந்து 37 ஆக குறைத்து ஆணை வெளியிட்டது.
இந்த இடங்களிலும் அவர்கள் தொழுகை நடத்த முடியாதபடி இந்து அமைப்புகள் இடையூறுகளை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. செக்டர் 12 பகுதியில் வசித்துவரும் இந்துவான அக்ஷய் ராவ் என்பவர் தனக்கு சொந்தமான காலி இடத்தில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அனுமதி வழங்கினார். மதநல்லிணக்கத்தின் பிரதிபலிப்பாக இது பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், குருகிராமில் உள்ள குருத்வாரா குரு சிங் சபாவின் தலைவர் ஷெர்தில் சிங் சந்து தங்கள் இடத்தை அனைத்து மதத்தினரும் வழிபாட்டுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார். இஸ்லாமியர்கள் தொழுகை மேற்கொள்வதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தராளமாக துருத்வாரா இடத்தை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: pod rooms: ஜப்பான் மாடல் அறைகள் மும்பையில்.. அசத்தும் இந்திய ரயில்வே!
இது தொடர்பாக ஷெர்தில் சிங் சந்து கூறுகையில், இஸ்லாம் சமூகம் இடப்பற்றாக்குறையால் பிரச்சினைகளை எதிர்கொள்கிறது, எனவே அவர்கள் எங்கள் ஐந்து குருத்வாராக்களின் வளாகத்தை வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பயன்படுத்தலாம். எல்லா மதங்களும் ஒன்றுதான், மனிதநேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இந்த குருத்வாராவுக்கு சொந்தமான இடங்களில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேர் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க: காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Muslim, Muslim Religion