ஹோம் /நியூஸ் /இந்தியா /

காரில் தனிமையில் இருந்த ஜோடி.. மிரட்டி லட்சத்தை சுருட்டிய போலி போலீஸ்

காரில் தனிமையில் இருந்த ஜோடி.. மிரட்டி லட்சத்தை சுருட்டிய போலி போலீஸ்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பொதுவெளியில் காருக்குள் பாலியல் உறவில் இருந்ததாக வழக்கு போடட்டுமா என மிரட்டியுள்ளார் போலி காவல் அதிகாரி.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Haryana, India

பொதுவெளியில் பாலியல் உறவில் இருந்ததாக வழக்கு பதிவு செய்வேன் என மிரட்டி காருக்கு இருந்த ஜோடியிடம் போலி காவல் அதிகாரி ஒருவர் ரூ.1.40 லட்சம் பணம் பறித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்தவர் சுபம் தனேஜா. இவர் கடந்த புதன்கிழமை இரவு 8 மணி அளவில் தனது சக பெண் ஊழியருடன் காரில் கிங்டம் ஆப் ஹெவன் என்ற பகுதியில் இருந்துள்ளார். அப்போது போலீஸ் சீருடையில் ஒரு நபர் காரின் அருகே வந்து கண்ணாடியை கீழே இறக்க சொல்லியுள்ளார்.

காரில் சுபம் ஒரு பெண்ணுடன் இருப்பதை அறிந்து கொண்ட அந்த நபர், இருவரின் செல்போன் மற்றும் ஐடி கார்டுகளை தருமாறு கேட்டுள்ளார். பின்னர் அதை வாங்கி பார்த்தபின், இருவரையும் மிரட்டத்தொடங்கியுள்ளார். உங்கள் இருவர் மீதும் வழக்கு பதியப் போகிறேன். பொதுவெளியில் காருக்குள் பாலியல் உறவில் இருந்ததாக வழக்கு போடட்டுமா, காவல்நிலையத்திற்கு வாருங்கள் என மிரட்டியுள்ளார். இருவரும் பதறிப்போன நிலையில், ரூ.2 லட்சம் லஞ்சம் கொடுத்தால் தான் உங்கள் விடுவேன் என்றுள்ளார்.

பயத்தில் அந்த இருவரும் தங்களிடம் இருந்த ஏடிஎம் கார்டுகள் மூலம் ஒரு லட்சம் பணத்தை எடுத்துள்ளனர். அத்துடன் தங்களிடம் கையில் இருந்த ரூ.40,000 பணத்தையும் சேர்த்து மொத்தம் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்சமாக தந்துள்ளனர். பின்னர் தான் இருவரின் செல்போன் மற்றும் ஐடி கார்டுகளை அந்த போலீஸ் வேஷம் நபர் திருப்பி தந்துள்ளார். வீடு திரும்பிய பின்னர் தான் இருவருக்கும் சந்தேகம் ஏற்பட்டு காவல்நிலையத்தை அணுகியுள்ளனர்.

இதையும் படிங்க: சாட்டிங் போர்.. வீடியோ கால் பேசலாமா..! ஆசையை தூண்டி தொழிலதிபரிடம் ரூ.2.69 கோடியை சுருட்டிய கில்லாடி பெண்

அப்போது தான் அந்த நபர் போலி போலீஸ் என்ற உண்மை அம்பலமானது. தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சுபம் வழக்கு பதிவு செய்துள்ளார். சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து குற்றவாளியை கண்டுபிடித்து தருகிறோம் என காவல்துறை உறுதி அளித்துள்ளது.

First published:

Tags: Crime News, Fraud, Gurugram, Money, Police