சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா - பிஜாபூர் எல்லையில் மாவோயிஸ்ட்களுக்கும் பாதுகாப்பு படைவீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதல்களில் 22 பாதுகாப்புப்படை வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் காயமடைந்த சில வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் நடத்தியது திட்டமிட்ட தாக்குதல் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாவோயிஸ்ட்களின் தலைவர் மத்வி ஹிட்மா, சுக்மா - பிஜாபூர் எல்லையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதி விரைந்தனர். மாவோயிஸ்ட்களை தேடும் பணியில் டாஸ்க் போர்ஸ், டிஆர்ஜி, கோப்ரா படை வீரர்கள் ஈடுபட்டு வந்தனர். மொத்தம் 10 அணிகள் இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இரண்டு டீம்களும், மற்ற 8 டீம்கள் பிஜாபூர் பகுதியில் மூன்று கேம்ப்களில் தங்கியிருந்தனர். பிஜாபூர் முகாம்களில் இருந்து 6 டீம்கள் மாத்வி ஹிட்மாவை தேடி அடர்ந்த வனத்திற்குள் சென்றுள்ளனர்.
ஏப்ரல் 2-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு அலிபுடா மற்றும் ஜோனகுடா வழியாக 12 கிலோமீட்டர் பயணம் செய்து மீண்டும் அடுத்தநாள் மாலை 6 மணிக்கு திரும்புவதுதான் பிளானாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் எல்லாம் சரியாகத் தான் நடந்துக்கொண்டிருந்தது. பாதுகாப்பு படை வீரர்கள் திரும்பும் வழியில் அவர்களே நினைத்துப்பார்க்காத கொடூர தாக்குதல் நடந்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்களை சுற்றிவளைத்த மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த பகுதியில் பதுக்கி வைத்திருந்த ஐஇடி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர். கையெறி குண்டுகளாலும், துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
பிஜாபூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜவான்கள் கூறுகையில், “நாங்கள் எங்களது இலக்கை அடைந்தபோது அங்கு எங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் திரும்பி வரும்போது மாவோயிஸ்ட்களின் தாக்குதலுக்கு உள்ளானோம். அவர்களிடம் அதிநவீன ஆயுதங்களும் இருந்தன. அவை ஏராளமாக பயன்படுத்தப்பட்டன. நாங்கள் செல்லும்போது இரண்டு கிராமங்களை கடந்துதான் சென்றோம். அந்த இரண்டு கிராமங்களும் காலியாக இருந்தன. எதோ தவறாக இருக்கிறது என்பதை நாங்கள் மிகவும் தாமதமாகத் தான் உணர்ந்தோம்.”என்றனர்.
பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளையில் மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் காயமடைந்த மற்றும் உயிர்நீத்த வீரர்களையும் அப்புறப்படுத்த முயற்சி செய்துள்ளனர். அந்தப்பகுதியில் இருந்த குடியிருப்புகளில் இருந்து தாக்குதல் நடந்த முயன்றுள்ளனர். கையெறி குண்டுகளை வீசி மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் ஈடுபட்டதால் பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்திருந்தால் அங்கிருந்து திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.
உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில்தான் இந்த ஆப்ரேஷனை தொடங்கினோம் என சத்தீஸ்கர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தாந்தேவாடா மலையில் உள்ள ரிசீவர் காவல்துறையின் தகவல்களை இடைமறித்தது. இதுதான் முதன்மை ஆதாரம். இது முதன்முறை அல்ல. இதற்கு முன்பு இப்படி நடந்துள்ளது. ஒரு வருடத்துக்கு முன்பு மின்பாவில் நடந்தது. இப்போது இங்கே நடந்துள்ளது. இதுதான் தெளிவான அறிகுறிகள் அவர்களின் குறியீட்டை நாங்கள் கேட்கிறோம் என்பது அவர்களுக்கு தெளிவாக தெரியும். அவர்கள் நன்கு திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியது இது காட்டுகிறது. நாங்கள் சென்ற இடத்தில் எதையும் கண்டுபிடிக்க மாட்டோம். திரும்ப வருவோம் என அவர்களுக்கு தெரியும். எங்கள் குழுவுக்காக அவர்கள் காத்திருந்தனர். அந்த தாக்குதலில் இருந்து தப்பி ஜவான்கள் முகாம்களுக்கு ஓடி வந்தனர். தாந்தேவாடா மலையில் இருந்து முகாமை வந்தடைந்தனர். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலில் மாத்வி ஹிட்மா மூளையாக செயல்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றனர். தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து சில கிலோமீட்டர் தூரத்தில் ஹிட்மா இருந்ததாக உளவுத்துறை தகவல் கூறுகிறது. இது கண்மூடித்தனமான கொரில்லா தாக்குதல் இல்லை திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கோப்ரா படை வீரர்கள் கூறுகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bomb blast, Chattisgarh, Gun shoot, Maoist, Police