கேரளாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... தமிழகத்தைச் சேர்ந்தவரா?
கேரளாவில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை... தமிழகத்தைச் சேர்ந்தவரா?
கோப்புப்படம்
தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்தத பகுதியில் என்கவுண்டர் நடந்துள்ளதால் அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கேரளாவில் நக்சல் பிரிவு போலீசாருக்கும் மாவோஸ்களுக்கும் இடையே நடைப்பெற்ற துப்பாக்கி சண்டையில் மாவோஸ்ட் ஒருவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம் வயநாடு அருகே வைத்திரி என்னும் பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கியுடன் சில மாவோஸ்டுகள் நுழைந்துள்ளனர்.
பின்னர் தனியார் தங்கும் விடுதியில் பணம் கேட்டு மிரட்டி அங்குள்ளவர்களை சிறை பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கேரள நக்சல் பிரிவு அதிரடி படையினர் விரைந்து சென்றனர்.
அப்போது கேரள நக்சல் பிரிவு அதிரடி படையினருக்கும் மாவோஸ்ட்டுகளுக்கும் துப்பாகி சண்டை நடைப்பெற்றுள்ளது. இதில் மாவோஸ்ட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயம் அடைந்துள்ளார். இறந்த மாவோஸ்ட் யார் என்பது குறித்த விசாரணை நடைப்பெற்று வருகிறது.
உயிரிழந்த மாவோயிஸ்ட்
இந்த சம்பவம் தமிழக எல்லையான நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ளதால் அங்கு உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாவோஸ்ட் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்க கூடும் என்பதால் அடையாளம் காண தமிழக நக்சல் பிரிவு போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.