ஹோம் /நியூஸ் /இந்தியா /

உதயமானது 'ஜனநாயக விடுதலை கட்சி'.. காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத்!

உதயமானது 'ஜனநாயக விடுதலை கட்சி'.. காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை தொடங்கிய குலாம் நபி ஆசாத்!

புதிய கட்சியின் பெயரை வெளியிட்டார் குலாம் நபி ஆசாத்

புதிய கட்சியின் பெயரை வெளியிட்டார் குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சியின் பெயர் மற்றும் கொடியை வெளியிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தனது புதிய கட்சிக்கான பெயரை அறிவித்துள்ளார். தனது கட்சிக்கு அவர் டெமாக்ரடிக் ஆசாத் பார்டி அதாவது ஜனநாயக விடுதலை கட்சி என பெயரிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களை சந்தித்து இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட குலாம் நபி ஆசாத், கட்சிக்கு பெயர் தேர்வு செய்த மிகவும் கஷ்டப்பட்டதாகவும், சுமார் 1,500 பெயர்கள் இதற்காக பரிசீலிக்கப்பட்டதாகவும் கூறினார்.

  "உருது மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளும் பரிசீலிக்கப்பட்ட நிலையில், இரு மொழிகளின் கலவையான இந்துஸ்தானி மொழியை அடிப்படையாக கொண்டு இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜனநாயகம், அமைதி, சுதந்திரம் ஆகியவைதான் கட்சியின் அடிப்படை கொள்கை என்பதால் இதை குறிக்கும் விதத்தில் பெயர் வைத்துள்ளோம் என்றார். மேலும் அவர் மஞ்சள், நீளம், வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களை கொண்ட கட்சிக் கொடியையும் அவர் வெளியிட்டுள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை விரைந்து பெற்று தருவதே எங்கள் கட்சியின் முதல் நோக்கம்" என்றுள்ளார் குலாம் நபி ஆசாத்.

  ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் 50 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவராகவும் இருந்தவர் குலாம் நபி ஆசாத். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆகஸ்ட் மாத இறுதியில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா தொடர்பாக கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதத்தில் கட்சியின் மோசமான நிலைக்கு ராகுல் காந்திதான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

  இதையும் படிங்க: 80 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா? - ராஜஸ்தானில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம்!

  மேலும், அவர் காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் ரத்தத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. கம்ப்யூட்டராலும், சமூக வலைத்தளங்களாலும் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல. இப்போது கட்சி களத்தில் செயல்படாமல் சமூக வலைத்தளங்களில் மட்டுமே செயல்பட்டு வருகிறது என்று புகார் தெரிவித்திருந்தார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Jammu and Kashmir, Political party