ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி தீவிரமடையும் போராட்டங்கள் - ரயில்கள், பேருந்து சேவை பாதிப்பு

ராஜஸ்தானில் இட ஒதுக்கீடு கோரி தீவிரமடையும் போராட்டங்கள் - ரயில்கள், பேருந்து சேவை பாதிப்பு

இட ஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் ரயில் தண்டவாளங்களில் படுத்தும், சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  ராஜஸ்தானில் இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் குஜ்ஜார் சமூகத்தினருக்கு சிறப்பு இடஒதுக்கீடு கோரி கடந்த 2007ம் ஆண்டில் இருந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

  குஜ்ஜார் சமூகத்திலேயே 2 பிரிவினர் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. ஹிம்மத் சிங் குர்ஜார் என்பவர் ஒரு பிரிவாகவும், விஜய் பயின்ஸ்லா என்பவர் தலைமையில் மற்றொரு பிரிவினரும் போராடி வருகின்றனர். ராஜஸ்தான் அரசிடம் நடந்த பேச்சுவார்த்தையில் ஹிம்மத் சிங் தலைமையிலான குழுவுக்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

  Also read: சிறைத் துறையினர் துன்புறுத்துவதாக கைதிகள் புகார் மனு - கோவை மத்திய சிறைத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கோரும் நீதிமன்றம்

  ஆனால் மற்றொரு தரப்பினர் ரயில் தண்டவாளங்களில் படுத்தும், சாலை மறியல் செய்தும் வருகின்றனர். இதனால் ஹிந்துவான் சிட்டி-பயானா ரயில் பாதையில் 7 ரயில்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன.

  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு பேருந்து போக்குவரத்தும் ராஜஸ்தானில் நிறுத்தப்பட்டுள்ளது.
  Published by:Rizwan
  First published: