ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடக்கம்

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் - முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை தொடக்கம்

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

பாஜக காங்கிரஸ் இடையே 89 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் சட்டப்பேரவை முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.

குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தலில் முதல் கட்ட தேர்தல் டிசம்பர் நளையும் இரண்டாம் கட்ட தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் உள்ள 182 சட்டப்பேரவை தொகுதிகளில் முதற்கட்டமான தேர்தல் 89 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமான தேர்தல் 93 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது.

முதற்கட்டமாக நடைபெறும் தேர்தலில் 788 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 70 பெண்களும் 339 சுயேட்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். பாஜக காங்கிரஸ் இடையே 89 தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை 2 வேட்பாளர்கள் திடீரென வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதால் 87 மட்டுமே உள்ளனர்.

இதையும் படிங்க: 8,9,10 வகுப்பு பள்ளி மாணவர்களின் ஸ்கூல் பேக்கில் ஆணுறை.. அதிர்ச்சியில் உறைந்த ஆசிரியர்கள்

முதற் கட்டமாக நடைபெற உள்ள தேர்தலுக்கு, 25,434 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் நகர் பகுதியில் 9,018 வாக்கு சாவடிகளும், கிராம புறங்களில் 16,416 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளது. 38 ,749 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகிறது.

குஜராத்தில் மொத்தமாக மொத்தமாக 4, 91,17,708 பேர் உள்ள நிலையில் , முதற்கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் 3,39,76,670 பேர் வாக்களிக்கவுள்ளனர். இதில் ஆண்கள் 1,24,33,362 பேரும், பெண்கள் 1 ,15,42, 811 பேர் உள்ளனர்.

First published:

Tags: Assembly Election 2022, Election commission of India, Gujarat