ஹோம் /நியூஸ் /இந்தியா /

குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குப்பதிவு..!

குஜராத் முதற்கட்ட தேர்தலில் 60.20 சதவீத வாக்குப்பதிவு..!

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2022

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் 2022

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி நடந்து முடிந்தது .

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. 89 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வியாழக்கிழமை விறுவிறுப்பாக நடைபெற்றது, தெற்கு குஜராத்தின் 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 70 பெண்கள் உள்பட 788 பேர் பேட்டியிடுகின்றனர்

2 கோடியே 39 லட்சத்து 76 ஆயிரத்து 760 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். மக்கள் தங்கள் வாக்குகளை செலுத்த வசதியாக 25,434 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. 34,324 வாக்குப்பதிவு எந்திரங்கள், அதே எண்ணிக்கையிலான கட்டுப்பாட்டு கருவிகள், 38,749 வாக்கு ஒப்புகை சீட்டு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 2, 20,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், முதியவர்கள், முதன்முறை வாக்காளர்கள் உள்ளிட்ட ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர். சூரத்தில் அமைச்சர் புர்னேஷ் மோடி, மேள தாளங்கள் முழங்க ஆதரவாளர்களுடன் நடந்து சென்றார். பின்பு வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். அம்ரேலியில் காங்கிரஸ் எம்எல்ஏ பரேஷ் தனானி சைக்கிளின் பின்பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டரை கட்டியபடி, வாக்களிக்க சென்றார்.

இதையும் படிங்க: மணமேடையில் மாப்பிள்ளை கொடுத்த முத்தம்.. திருமணத்தையே நிறுத்திய மணமகள் - போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பஞ்சாயத்து

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குஜராத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளதாகவும், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார். ஆட்சி மாற்றம் வரும் என குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.குஜராத்தின் ஜாம்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவியுமான ரிவாபா, ராஜ்கோட்டில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரே குடும்பத்தில் வெவ்வேறு கட்சிகளின் சித்தாந்தங்களை கொண்டவர்கள் இருப்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்றும், ஜாம்நகர் மக்களை தாம் நம்புவதாகவும் கூறினார். வளர்ச்சிக்கு தாங்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் ரிவாபா குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஜாம்நகர் வாக்குச்சாவடியில், கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா வாக்களித்தார். இதேபோல் ஜாம்நகரில் உள்ள வாக்குச்சாவடியில் ரவீந்திர ஜடேஜாவின் தந்தை அனிருத் சின்ஹ் ஜடேஜா மற்றும் அவரது தங்கை நயினா ஜடேஜா ஆகியோர் வாக்களித்தனர். ரவீந்திர ஜடேஜாவின் மனைவி பாஜக சார்பில் போட்டியிடும் நிலையில், ஜடேஜாவின் தந்தை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்

இந்த நிலையில் முதற்கட்ட  தேர்தலில்  60.20 சதவீத வாக்கு பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 5- ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 8- ஆம் தேதியும் நடைபெறுகின்றன. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் POLL OF POLLS என்ற மாபெரும் கருத்துக்கணிப்பு வெளியாகிறது.

First published:

Tags: Assembly Election 2022, Gujarat