விதவைப் பெண்ணின் ஆடைகளை கிழித்து.. மொட்டை அடித்த கொடூரம் - பெண் உட்பட 6பேர் கைது

மாதிரிப்படம்

பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரது தலையை மொட்டையடித்து கிராம மக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர்.

  • Share this:
    குஜராத் சேர்ந்த விதவைப் பெண் திருமணமான ஆணுடன் தகாத வைத்திருப்பதாக கூறி கிராம மக்கள் அடித்து துன்புறுத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

    குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டம் சஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஜூலை 30-ம் தேதி காலை ஹிம்மதுநகரில் உள்ள வங்கிக்கு சில ஆவணங்களை சமர்ப்பிப்பதற்காக தனது இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளார். வங்கியில் வேலை முடிந்ததும் தனது கிராமத்துக்கு திரும்பியுள்ளார்.

    Also Read:  அரிவாளுடன் ஆட்டம்போட்ட இளைஞர்.. வாட்ஸ் அப்பில் தீயாய் பரவிய வீடியோ

    வெயிலில் குழந்தைகளுடன் அவர் நடந்து வருவதை கவனித்த அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கொடுத்துள்ளார். விதவைப்பெண் மற்றும் அவரது குழந்தைகளை வாகனத்தில் ஏற்றி கிராமத்துக்கு வந்துள்ளார்.கிராமத்தை நெருங்கும் வேலையில் நான்கு பேர் கொண்ட கும்பல் அவர்களின் வாகனத்தை நிறுத்தி இருவரையும் தாக்கத் தொடங்கியுள்ளனர்.

    விதவைப்பெண்ணுக்கும் லிப்ட் கொடுத்த நபருக்கும் தவறான உறவு இருப்பதாக கூறி தாக்கியுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்டதில் ஒருவர் லிப்ட் கொடுத்த நபரின் மனைவியின் அண்ணன் என்பது தெரியவந்துள்ளது.இவர்கள் இருவருக்கும் ரகசிய தொடர்பு இருப்பதாக கூறி அடித்துள்ளனர். அந்தப்பெண்ணின் ஆடைகளை கிழித்து அவரது தலையை மொட்டையடித்து கிராம மக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர். இனி உங்கள் இருவரையும் ஒன்றாக பார்த்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.

    Also Read:  பிச்சைக்காரரிடம் ரூ.2 லட்சம் கொள்ளை.. டீ குடிக்கும் நேரத்தில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தச்சம்பவம் தொடர்பாக அந்தப்பெண் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விதவைப்பெண்ணை தாக்கியதாக அந்தக்கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 6பேரை கைது செய்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: