ஹோம் /நியூஸ் /இந்தியா /

விபரீதத்தில் முடிந்த ஃபயர் கட்.. சொந்த காசில் தலைக்கு தீவைத்துக்கொண்டு இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

விபரீதத்தில் முடிந்த ஃபயர் கட்.. சொந்த காசில் தலைக்கு தீவைத்துக்கொண்டு இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

முடி வெட்டும் போது இளைஞர் தலையில் பற்றிய நெருப்பு

முடி வெட்டும் போது இளைஞர் தலையில் பற்றிய நெருப்பு

18 வயது இளைஞர் ஒருவர் சலூனில் ஃபயர் ஹேர் கட் செய்யும் போது தலையில் தீப்பற்றியதில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Gujarat, India

  அன்மை காலமாகவே வித விதமான சிகை அலங்காரங்களுக்கான மவுசு கூடி வரும் நிலையில், அதில் முக்கிய ட்ரெண்டாக இருப்பது தலையில் நெருப்பு பற்ற வைத்து முடிவெட்டும்  ஃபயர் ஹேர் கட் ஆகும்.

  இந்த வினோத ஹேர்கட் மீது இளசுகளுக்கு ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், அப்படித்தான் குஜராத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் ஆர்வம் ஆர்வக்கோளாறாக மாறி கடைசியில் அது விபரீத விபத்தாக மாறியுள்ளது. அம்மாநிலத்தின் வல்சாத் மாவட்டத்தில் உள்ள வாபி என்ற பகுதியில் உள்ள சலூன் கடையில் 18வயது இளைஞர் ஃபயர் ஹேர் கட் செய்ய வந்துள்ளார். நாற்காலியில் அமர்ந்து முகத்தை முடி துணியை சுற்றிக்கொண்டு இளைஞர் அமர்ந்திருக்க, சலூன் கடைக்காரர் தலையில் ரசாயனத்தை தடவி ஃபயரை பற்ற வைக்க ஆயத்தமானார்.

  இந்த சம்பவத்தை ஜாலியாக பின்னால் இருந்து ஒரு நபர் வீடியோ எடுத்து வந்துள்ளார்.  தலையில் நெருப்பை பற்ற வைத்த அடுத்த நொடியிலேயே சீப்பை வைத்து அதை அனைத்து ஹேர் ஸ்டைல் செய்ய முயற்சிக்க, நெருப்பு அணையாமல் வேகமாக பற்றத் தொடங்கியது.

  10 நொடிகளுக்கு மேல் நெருப்பு எரியத் தொடங்கியதும் சூடு தாங்காமல் 18 வயது இளைஞர் துடித்துப்போய் துண்டால் நெருப்பை அனைக்க முயன்றார். அவருக்கு தீக்காயம் ஏற்பட்ட நிலையில், வல்சாத் மாவட்ட அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  இதையும் படிங்க: இந்தியாவில் வெப்ப காற்று காரணமாக மரணங்கள் 55 சதவீதம் அதிகரிப்பு.. சர்வதேச ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  இந்த சம்பவத்தில் அவரது தலை, கழுத்து, மார்பு ஆகிய பகுதிகளில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட சலூன் கடைக்கு சென்ற காவல்துறையினர் சம்பவம் தொடர்பாக சலூன்கடைக்காரரிடம் விசாரணை செய்து வருகின்றனர். தலையில் என்ன ரசாயணம் கலக்கப்பட்டது, அதில் ஏதேனும் கலப்படம் செய்ததால் விபத்து நிகழ்ந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த விபரீத விபத்தின் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Fire, Fire accident, Hair, Viral Video