தொடரும் போலீசார் - வாகன ஓட்டிகள் தகராறு... அபராதத்தை குறைத்த குஜராத் அரசு

தொடரும் போலீசார் - வாகன ஓட்டிகள் தகராறு... அபராதத்தை குறைத்த குஜராத் அரசு
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: September 11, 2019, 9:43 AM IST
  • Share this:
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் அபராதத்தொகையால் தினமும் வாகன ஓட்டிகள் - போலீசார் இடையே தகராறு ஏற்படுவதால், அபராதத்தொகையை குஜராத் அரசு குறைத்துள்ளது.

வாகன விபத்துகளை குறைக்கும் நோக்கிலும், விதிமுறைகளை வாகன ஓட்டிகள் சரியாக கடைபிடிக்கும் நோக்கிலும் மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக்கி மத்திய அரசு சமீபத்தில் திருத்தம் கொண்டு வந்தது. சாலை விதிகளை மீறுவோருக்கு அபராதத்தை பல மடங்கு உயர்த்த இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்த சட்டம் கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த அபராத உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது. மேலும் சில மாநில அரசுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்தாமல் கிடப்பில் வைத்துள்ளன. கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் அமல்படுத்தி, எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைத்துள்ளன.


இந்நிலையில், உயர்த்தப்பட்டுள்ள அபராதத்தை குறைத்து குஜராத் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. தினமும் வாகன ஓட்டிகள் - போலீசார் இடையே தகராறு ஏற்படுவதால், ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவோருக்கான அபராத தொகையை ரூ.1000-ல் இருந்து ரூ.500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதைப்போல லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் என்ற நிலையில், இரு சக்கர வாகனம் ஓட்டுனர்களுக்கு ரூ.2 ஆயிரமாகவும், 4 சக்கர வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.3 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு இருக்கிறது.

இதேபோல சீட் பெல்ட் போடாமல் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கும் அபராதம் குறைக்கப்பட்டுள்ளது.
First published: September 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading